காரச்செடிகளில் இருக்கும் பகுதிகளில் யாரும் விவசாயமும் செய்யமாட்டார்கள். ஆனால் ‘கல்லையும் பொன்னாக்க முடியும்’ என்ற வைராக்கியத்துடன் யார் வேண்டுமானாலும் அந்தப் பகுதியில் விவசாயம் செய்யலாம்.
கரடுமுரடாக இருக்கும் காட்டுப்பகுதியை அழித்து விவசாய நிலமாக மாற்றலாம்.
undefined
நீர்த் தேவைக்காக ஆழ்துளை கிணறுகளை அமைக்கலாம்.
நிலத்தை சீர்ப்படுத்த ஒன்று முதல் இரண்டு இலட்சம் வரை செலவு பிடிக்கும்.
நிலங்களை சிறு, சிறு பகுதிகளாக பிரித்து தக்காளி, வெங்காயம், கடலை, தர்பூசணி, மிளகாய், கீரை வகைகள், கொத்தவரை, நெல் போன்றவற்றை பயிரிடலாம்.
மேலும் இடங்கள் இருந்தால் தேக்கு, யூகலிப்டஸ், சவுக்கு போன்ற நீண்டகால பலன் தரக்கூடிய மரங்கள் வளர்க்கலாம். இதன்மூலம் மாதம் ரூ.40 ஆயிரம் இலாபம் கிடைக்கும்.
தக்காளி, வெங்காயம், தர்பூசணி, மிளகாய், கீரை வகைகளை உள்ளூரிலேயே விற்பனை செய்தால் தினமும் கையில் பணம் புரளும்.
களையெடுப்பு, உழவு செய்ய மட்டும் கூலி ஆட்களை பயன்படுத்தலாம்.
ஒவ்வொரு பயிரும் குறைவான அளவே பயிரிட்டாலும், காய், பழங்களை பறித்து இலாபம் பார்க்கலாம்.
தர்பூசணி போன்ற சீசன் பயிர்களையும் பயிரிட்டு பணத்தை அள்ளலாம்.