1.. கரும்பு நுனிகுருத்துப் புழு
மேலாண்மை
undefined
கோ 312, கோ 421, கோ 661, கோ 917 மற்றும் கோ 853 போன்ற எதிர்ப்புத் திறனுள்ள இரகங்களைப் பயிரிடுதல்.
நடவு: டிசம்பர் – ஜனவரி
இடைப்பயிர் (ஊடுபயிர்): தக்கைப் பூண்டு
தேவையான நீர்ப் பாசனம்.
காய்ந்த நடுக்குருத்தினை எடுத்து அழித்தல்.
ஸ்டம்பியோப்சிஸ் இன்பரன்ஸ் என்ற ஒட்டுண்ணியை ஹெக்டருக்கு 125 (பெண்) என்ற எண்ணிக்கையில் வயலில் விடவும்.
2.. இடைகணுப் புழு
மேலாண்மை:
எதிர்ப்புத்திறனுள்ள இரகங்கள்: கோ 975, கோ 7304, மற்றும் கோ 46
முட்டைகளை சேகரித்து அழித்தல்
சோகை உரிப்பு: 150 மற்றும் 210 வது நாட்களில்
தேவைக்கு அதிகமான உர பயன்பாட்டைத் தவிர்த்தல்.
முட்டைகளைத் தாக்கும் டிரைக்கோகிரம்மா கைலோனிஸ் ஒட்டுண்ணியை 15 நாட்களுக்கு ஒரு முறை நட்ட 4 ம் மாதத்திலிருந்து 6 முறை ஹெக்டருக்கு 2.5 சிசி என்ற அளவில் பயன்படுத்துதல்.
3. மேல் தண்டுதுளைப்பான்
எதிர்ப்புத்திறனுள்ள இரகங்கள்: கோ 419, கோ 745, மற்றும் கோ 6516
தாங்கும் திறனுள்ள இரகங்கள்: கோ 859, கோ 1158, மற்றும் கோ 7224
முட்டைகளை சேகரித்து அழித்தல்
முட்டை ஒட்டுண்ணி: டிரைக்கோகிரம்மா மைனூட்டம்
புழுப் பருவ ஒட்டுண்ணி: கொனியோகஸ் இன்டிகஸ்
கூட்டுப்புழு ஒட்டுண்ணி: டெட்ராடிக்கஸ் அய்யாரி