1.. தொடர் நீர்வரத்து மற்றும் மின்சாரம் கிடைக்கும் பகுதியில் அமைக்கப்பட வேண்டும். நீரோடைக்கு அருகில் அமையப்பெற்றால், தண்ணீரின் தரம் நன்றாக இருக்கும்.
2. வேளாண் உபபொருட்களான புண்ணாக்கு, அரிசித்தவிடு, கோதுமைத்தவிடு, மீன் உணவு, இறால் தலை உணவு ஆகியவை தொடர்ந்து கிடைக்கும் இடங்களில் திடமான குருணை வடிவ, மீன் உணவு தயார் செய்ய இயலும்.
undefined
3.. அலங்கார மீன் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் குஞ்சுகள் அதிக தரம் உடையவையாக இருத்தல் வேண்டும்.
4. இளம்குஞ்சுகள் நல்ல வளர்ச்சி அடையும்வரை வளர்க்கப்பட வேண்டும். இது நமக்கு நல்ல அனுபவத்தைக் கொடுப்பதோடு, நல்ல தரமான மீன்களை தேர்தெடுக்கவும் உதவுகிறது.
5. குஞ்சு உற்பத்தி மற்றும் வளர்ப்பு இடங்கள் விமான நிலையம், ரயில் நிலையம் அருகில் அமைக்கப்பட வேண்டும். இதனால் எளிதில், விரைவாக உள்நாட்டிற்கும், வெளிநாட்டிற்கும் உயிருள்ள மீன் குஞ்சுகளை அனுப்ப இயலும்.
6. மீன் குஞ்சு உற்பத்தியாளர், ஒரே ஒரு வகையினை உற்பத்தி செய்வதிலும், இனப்பெருக்கம் செய்வதிலும் கவனம் செலுத்த வேண்டும்.