குறைவான மா உற்பத்தித்திறனுக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.
அவற்றில் கொட்டை கன்றுகளை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட தோப்புகள்,
உள்ளூர் மா ரகங்களை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட தோப்புகள் தொடர்ந்து காய்க்காமல் ஒருவருடம் விட்டு மறுவருடம் காய்க்கும் தன்மை,
மாவின் ஓங்கிய தழை உற்பத்தி செய்யும் திறன்,
அதிக இடைவெளிவிட்டு நடவு செய்தல்,
பூச்சி மற்றும் நோய்தாக்குதல்,
மாவில் ஏற்படும் வினையியல் குறைபாடுகள் ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன.
மா உற்பத்தி மற்றும் விளைச்சலை பெருக்க பல்வேறு தொழில்நுட்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இத்தகைய தொழில்நுட்பங்களை கடைபிடிப்பதன் மூலம் மா உற்பத்தியை பெருமளவு அதிகரிக்கலாம்.
1.. மா உற்பத்தியில் சரியான இடைவெளியை பின்பற்றுதல்
2.. சொட்டுநீர் பாசனம் மற்றும் நீர்வழி உரமிடல் முறை
3.. சரியான கிளை படர்வு மேலாண்மை
4.. மா சாகுபடியை தேவைக்கேற்ப இயந்திரமயமாக்குதல்,
5.. அறுவடைக்கு முன் மற்றும் பின் பரிந்துரைக்கப்படும் தொழில் நுட்பங்களை பின்பற்றுதல்,
6.. வயதான மரங்களை மீண்டும் காய்க்க வைக்க அவற்றின் தேவையற்ற கிளைகளை வெட்டி புனரமைத்தல் தேவைப்பட்டால் ஒட்டுகட்டி புதுப்பித்தல்
7.. பூ மற்றும் காய் பிடிப்புக்கு தேவையான வளர்ச்சி ஊக்கிகளை பயன்படுத்துதல் போன்றவற்றை முறையாக கடைபிடிக்க வேண்டும்.