மா சாகுபடியில் விளைச்சலை அதிகரிக்கும் வழி:
பிப்ரவரி முதல் வாரத்தில் பூ பூக்காத கிளைகளில் 0.5 சத யூரியா கரைசல் (5கிராம் யூரியா 1 லிட்டர் தண்ணீரில் கலந்து) அல்லது பொட்டாசியம் நைட்ரேட் 1.0 சதம் (10கிராம் பொட்டாசியம் நைட்ரேட்டை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து) தெளிப்பதால் 10-15 நாள்களில் கிளைகளில் பூக்கள் தோன்றும்.
undefined
பூக்கும் தருணத்தில் என்.ஏ.ஏ என்ற அளவில் வளர்ச்சி ஊக்கி மருந்தை 20பி.பி.எம். என்ற அளவில் (அதாவது 20 மில்லி கிராம் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து) இரண்டு முறை, பூக்கும் தருணத்தில் ஒரு முறையும், பிஞ்சுகள் மிளகு அளவில் இருக்கும் போது ஒரு முறையும் தெளிப்பதால், பூக்கள் பிஞ்சுகள் உதிர்வது தடுக்கப்பட்டு காய்ப்புத் தன்மை அதிகரிக்கும்.
இப்படி செய்வதால் மா சாகுபடியில் நல்ல விளைச்சலை அடையலாம்.