இந்த வழிகளைப் பின்பற்றினால் எள்ளில் நல்ல மகசூலும், விளைச்சலும் பெறலாம்…

 |  First Published Jun 5, 2017, 11:37 AM IST
Following these ways can yield good yields and yields



எள் மகசூல் பெருக்கும் வழி:

நல்ல மகசூல் தரக்கூடிய பயிராக தென்படுவது எள்.

Tap to resize

Latest Videos

எள் விதைப்பதற்கு முன்னாடி வயலை உழுது மேலாக உழவு செய்யனும்.  பிறகு எள் விதைப்பு செய்யனும். 

அதற்கு பிறகு தான் படல் போட்டு இழுத்துவிடனும்.  ஒரு ஏக்கருக்கு 1 – 1/4 கிலோ விதை எள் தேவை.  படி அளவில் சொல்லனும்னா 1 – 1/2 படி விதை எள் தேவை. 

ஒரு பாக்கெட் பாஸ்போ பாக்டீரியா, சூடோமோனாஸ் 20 கிராம் தேவை.  முதலில் ஒரு லிட்டர் தண்ணீரில பாஸ்போபாக்டீரியாவை கொட்டி கலக்கிவிட்டு, பிறகு எள்ளை கொட்டி குச்சியால கலக்கிவிடனும்.  அதற்கு பிறகுதான் சூடோமோனாஸை கொட்டி கலக்கனும். 

எள் தண்ணீரை எல்லாம் உறிஞ்சி கெட்டியாகிவிடும்.  அதற்கு அப்புறம் தான் எள்ளை எடுத்து சாக்குல கொட்டி உலர்த்திவிடனும். 

பிறகு விதைகளை எடுத்து விதைப்பு செய்யலாம்.  15 நாள் களை எடுத்துவிட்டு எள் பயிரை களைத்துவிடனும். 

ஒரு சதுர மீட்டருக்கு 10 செடி இருக்குமாறு பார்த்துக்கிட்டு களை எடுக்க லேசான ஈரமும், களை எடுத்த பிறகு எடுத்த களைகளை காயவிட்டு பிறகு தண்ணீர் விடனும். 

இவ்வாறு செய்தால் நல்ல மகசூலும், விளைச்சலும் கிடைக்கும்.

click me!