பால் பண்ணை தொழில் பற்றி உங்களுக்கு தெரிந்ததும், தெரியாததும்!

Asianet News Tamil  
Published : Dec 23, 2017, 02:12 PM ISTUpdated : Sep 19, 2018, 01:43 AM IST
 பால் பண்ணை தொழில் பற்றி உங்களுக்கு தெரிந்ததும், தெரியாததும்!

சுருக்கம்

When you know about the dairy industry do not know!

** பால் பண்ணை என்பது சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் மற்றும் வேளாண் தொழிலாளர்களுக்கு வருமானம் ஈட்டக்கூடிய ஒரு முக்கிய உப தொழிலாகும்.

** கால்நடைகளினால் கிடைக்கும் எரு உரம் மூலம் இயற்கை உரம் தயாரிக்கவும், மண்ணை வளப்படுத்தவும், பயிர்கள் நன்கு வளரவும் உதவுகிறது.

** கால்நடைகளின் சாணத்திலிருந்து தயாரிக்கப்படும் சாண எரிவாயு வீட்டு உபயோகத்திற்கு எரிபொருளாக மட்டுமின்றி கிணற்றிலிருந்து நீர் இறைக்க தேவைப்படும் இன்ஜீன்களுக்கும் எரிபொருளாக பயன்படுகிறது.

** வேளாண்மையின் உபரி பொருள்களான உப பொருள்களே கால்நடைகளுக்கான இலாபகரமான தீவனமாக அமைகிறது. பெரும்பாலும் பண்ணை செயல்பாடுகளுக்கும், போக்குவரத்துக்கும், அதிக அளவில் எருதுகள் பயன்படுகின்றன.

** ஆரம்பத்திலிருந்தே வேளாண்மை சார் தொழில்களில் , பெரும்பாலான வேலைவாய்ப்பும், இலாபம் ஈட்டக்கூடிய தொழிலாக பால் பண்ணை அமைகிறது. பால் பண்ணை வருடம் முழுவதும் வேலைவாய்ப்பை வழங்குகிறது.

** பால் பண்ணை மூலம் முக்கியமாக சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள், நிலமற்ற தொழிலாளர்களும் பயனடைகின்றனர்.  இரண்டு கறவை மாடுகளினால் ஒரு விவசாயிக்கு  ஒரு வருடத்திற்கு  கிடைக்கும் மொத்த உபரி தொகை 15000 ரூபாய். 

** இரண்டு கறவை மாடுகளை வாங்குவதற்கு தேவைப்படும் முதலீடு தொகை ரூ.19,000/- அதன் பிறகு வருடத்திற்கு திருப்பி செலுத்த வேண்டிய வட்டியுடன் கூடிய கடன் தொகை ரூ.5,450/- ஆனால் விவசாயிக்கு கிடைக்கும் நிகர லாபம் தோராயமாக ரூ.7000– 10000.

** கால்நடைகளின் தரம், பராமரிக்கப்படும் முறை, விற்பனை திறன் இவற்றைப் பொருத்தே கிடைக்கக்கூடிய வருமானம் அதிகரிக்கும்.

** உலக வங்கி கணக்கின்படி இந்தியாவில் 75% 940 மில்லியன் மக்களில் 5.87 மில்லியன் கிராமம், 145 மில்லியன் ஹெக்டேரில் விவசாய நிலம். சராசரியாக பண்ணை அளவு 1.66 ஹெக்டேர்.

** அதில் 70 மில்லியன் கிராம வீடு, 42%  2 ஹெக்டேர் வரையிலும் மற்றும் 37% நிலமற்ற வீட்டார். இந்த நிலமற்ற சிறு விவசாயி தங்களுடைய உடைமையில் 53% கால்நடை வளர்ப்பு மற்றும் 51% அதனுடைய பால் உற்பத்தியாகும்.

** பால் உற்பத்தியில் இந்த சிறு / நடுத்தர விவசாயி மற்றும் நிலமற்ற வேளாண் தொழிலாளர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். பால் தேவை அதிகமாக உள்ள நகர பகுதிகளிலும் பால் பண்ணை ஒரு முக்கிய லாபகரமான தொழிலாக மேற்கொள்ளப்படுகிறது.

PREV
click me!

Recommended Stories

PM Kisan திட்டத்தில் விவசாயிகளுக்கு சர்ப்ரைஸ் கிப்ட்.. பட்ஜெட்க்கு பின்னர் உயரப்போகும் தொகை..?
Agriculture: ஏக்கருக்கு ரூ. 5 லட்சம் வருமானம்.!விவசாயிகளின் வாழ்வை மாற்றும் பாமாயில் சாகுபடி.!