கிச்சலிச்சம்பா ரக நெல்
கிச்சலிச்சம்பா ரக நெல்லின் வயது 150 நாட்கள். தேர்வு செய்த ஒரு ஏக்கர் நிலத்தில் அதிகபட்சம் இரண்டு டன் மட்கிய எருவைப் பரவலாகக் கொட்டி, தண்ணீர் விட்டு இரண்டு முறை உழ வேண்டும். பிறகு இலை, தழைகளை (எருக்கன், ஆவாரை போன்றவை) போட்டு உழ வேண்டும்.
நாற்றுகளை நடவு செய்து நிலத்தின் ஈரப்பதத்தைப் பொறுத்து தண்ணீர் பாய்ச்சி வர வேண்டும். நடவு செய்த 20 நாட்கள் கழித்து, களை எடுக்க வேண்டும்.
களை எடுத்த 10 நாட்களுக்குள் அசோஸ்பைரில்லம், பாஸ்போ-பாக்டீரியா ஆகிய உயிர் உரங்களை ஏக்கருக்கு தலா 20 கிலோ அளவு தெளிக்க வேண்டும். 45 நாட்களுக்கு பத்து லிட்டர் நீரில், 300 மில்லி பஞ்சகவ்யாவைக் கலந்து தெளிக்கலாம்.
75 மற்றும் 100-ம் நாட்களில் 150 கிராம் கொம்பு சாண உரம் இட வேண்டும். கொம்பு சாண உரம் இல்லை என்றால், அசோஸ்பைரில்லம், பாஸ்போ-பாக்டீரியா ஆகிய உயிர் உரங்களை ஏக்கருக்கு தலா 20 கிலோ அளவு தெளிக்கவேண்டும்.
120 நாட்களுக்கு மேல் பாசனத்தைக் குறைக்க வேண்டும். 150-ம் நாளுக்கு மேல் அறுவடை செய்யலாம்.