மேய்ச்சல் முறையில் வெள்ளாடுகளை வளர்க்கும்போது இவற்றில் எல்லாம் கவனமாக இருக்கணும்...

 |  First Published Mar 26, 2018, 2:01 PM IST
When grazing is grown in grazing all of these are careful ...



மேய்ச்சல் / திறந்த வெளி

மேய்ச்சல் முறையில் 12 மீ x 18 மீ அளவுள்ள திறந்த வெளி அமைப்பானது 100-125 ஆடுகளுக்குப் போதுமானது. இந்தத்திறந்த வெளியானது நன்கு கம்பிகளால் பின்னப்பட்ட வேலிகளைக் கொண்டிருக்கவேண்டும். 

நிழல் தரும் மரங்கள் ஆங்காங்கு வளர்க்கப்பட்டிருக்கவேண்டும். நிறைய கம்பிகள் கொண்டு வேலி நன்கு பின்னப்பட்டதாக இருக்கவேண்டும். ஏனெனில் ஆடுகள் வேலிகளில் உராயும் தன்மை கொண்டவை. 

கூர்மையான கம்பிகள், நீட்டிக்கொண்டு இருந்தால் அவை ஆடுகள் உரசும் போது காயங்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. 1 x 1 மீ அளவுள்ள இரும்பாலான 60 செ.மீ உயரமுள்ள உருளை போன்ற அமைப்புகள், திறந்தவெளி மைதானத்திற்கு ஏற்றவை.

பிரித்து வைக்கும் கொட்டில்

மந்தை பெருகப் பெருக இடப்பற்றாக்குறை ஏற்படலாம். இதற்கென ஆடுகளின் எண்ணிக்கை அதிகமாகும் போது பிரித்து வைப்பதற்கென 3.6 மீ x 5 மீ அகலமுள்ள ஒரு தனிக்கொட்டில் அவசியம். இதை இரண்டு அல்லது மூன்று அறைகளாகப் பிரித்து, ஒவ்வொன்றிலும் நீர் மற்றும் தீவனத் தொட்டில்கள் அமைக்கவேண்டும்.

தீவனத் தொட்டி

வெள்ளாடுகள் கீழே விழுந்த தீவனங்களையோ, புற்களையோ சாப்பிடாது. எனவே 5 செ.மீ தடிமனுள்ள மரப்பலகையாலான ஒரு பெட்டியை தீவனம் கட்டும் கயிற்றின் கீழே வைக்கவேண்டும். 

ஆடுகள் தீவனம் சாப்பிடும் போது கீழே விழும் துண்டுகளை இப்பெட்டியில் சேகரித்தால், மண்படாத அவற்றை மீண்டும் ஆடுகள் உண்டுவிடுவதால், தீவனம் வீணாகாமல் தடுக்கப்படுகிறது.

click me!