கடந்தாண்டின் மழையளவு, கவாத்து செய்தல், தண்டின் வளர்ச்சி, இலைகளின் பயிர் வினையியல் மாறுபாடு, வளர்ச்சி ஊக்கி அளவு, தட்பவெப்ப நிலையைப் பொறுத்து டிச., முதல் பிப்., வரை மா மரங்கள் பூக்கும் நிலை மாறும்.
இந்தாண்டு கூடுதலாக மழை பெய்துள்ளதால் மாவிலைகளில் அதிக ஈரப்பதம் இருப்பதால் பூக்கும் காலம் தள்ளிப் போகலாம். இதற்கு பொட்டாசியம் நைட்ரேட் ரசாயன உப்பை மாமரங்களில் தெளிக்கலாம்.
ஒரு கிலோ பொட்டாசியம் நைட்ரேட், அரைகிலோ யூரியா எடுத்து 50 லிட்டர் தண்ணீரில் கலக்க வேண்டும். அதனுடன் 50 லிட்டர் தண்ணீர், 100 மில்லி ஒட்டும் திரவத்தை சேர்க்கவேண்டும். அதிக உப்புத்தன்மையுள்ள நீரை பயன்படுத்தக்கூடாது.
இலை, தளிர், மொட்டுக்கள் நன்கு நனையுமாறு மாலை வேளையில் 15 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை தெளிக்க வேண்டும். 5 வாரங்கள் கழித்து பூக்க ஆரம்பிக்கும்.