செடி முருங்கை பயிர்களை எப்படியெல்லாம பாதுகாக்கலாம்...

 |  First Published Apr 23, 2018, 1:14 PM IST
What is the protection of the plant Murugai crops?



செடி முருங்கையில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு

பழஈக்கள் :

பழு ஈக்களின் குஞ்சுகள் காயைத் தின்று சேதப்படுத்துதல், இதனைக் கட்டுப்படுத்த பாதிக்கப்ட்ட காய்களை சேகரித்து அழித்துவிடவேண்டும்.

பென்தியான்ஈ டைக்குளோர்வாஸ், மானோகுரோட்டோபாஸ் ஆகியவற்றில் ஏதாவது ஒரு மருந்தினை ஒரு லிட்டர் தண்ணீருக்கு இரண்டு மிலி என்ற விகிதத்தல் கலந்து தெளிக்கவேண்டும்.

மருந்து தெளிப்பதற்கு முன் காய்களைப் பறித்துவிடவேண்டும். மருந்த தெளித்தபின் 10 நாட்களுக்கு அறுவடை செய்யக்கூடாது.

பூ மொட்டுத் துளைப்பான் :

பூக்கள் தோன்ற ஆரம்பித்தவுடன் டைக்குளோர்வாஸ் அல்லது எண்டோசல்பான் ஒரு மில்லி மருந்தை ஒரு லிட்டர் நீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் 10 நாட்கள் இடைவெளியில் தெளிக்கவேண்டும்.

கம்பளிப்பூச்சிகள் :

இப்பூச்சிகள் இலைகளைத் தின்று சேதம் விளைவிக்கும்.

வளர்ச்சி பெற்ற  கம்பளிப் புழுக்களை மருந்து தெளித்து அழிப்பது மிகவும் கடினம்.

எனவே வளர்ந்த புழுக்களைக் கட்டுப்படுத்த நெருப்புப் பந்தங்களைக் கொண்டு புழுக்களின் மேல் தேய்க்கவெண்டும்.

தூர் அழுகல் நோய் :

இது பிஞ்சுக் காய்களின் தோல் பகுதியில் உண்டாகும் காயங்கள் மூலம் பூசணம் நுழைந்து அழுகலை உண்டாக்குகிறது.

காய்களின் வெளிப்பரப்பில்  பழுப்புநிறப் புள்ளிகள் முதலில் தோன்றும். பின்பு அதிக அளவில் கறுப்புப் புள்ளிகளாக மாறிவிடும்.

நோய் முற்றிய றிலையில் பிசின் போன்ற திரவம் வடியும்.

இந்நோய் பழ ஈயின் பாதிப்புடன் சேர்ந்து காணப்பட்டால் பெருஞ்சேதம் உண்டாக்கும்.

இதனைக் கட்டுப்படுத்த பிஞ்சுப் பருவத்தில் கார்பன்டாசிம் ஒரு லிட்டர் நீருக்கு ஒரு கிராம் அல்லது மேன்கோசெப் ஒரு லிட்டர் நீருக்கு இரண்டு கிராம் என்ற அளவில் தெளிக்கவேண்டும்.

காய்கள் வளர்ச்சியடையும் போது மறுபடியும் ஒரு முறை தெளிக்கவேண்டும்.

click me!