வாழை சாகுபடியில் இடைவெளியில் ஊடுபயிர்கள்
நிலத்தின் விளிம்பில் இருந்து 9 அடி இடைவெளியில் ஒரு வரிசை;
undefined
அதில் இருந்து நான்கரை அடியில் அடுத்த வரிசை;
அதில் இருந்து 9 அடியில் அதற்கடுத்த வரிசை;
அதில் இருந்து நாலரை அடியில் அடுத்த வரிசை. இந்த வரிசைப்படி நடவு செய்ய வேண்டும்.
செடிக்குச் செடி நாலரை அடி இடைவெளி இருக்க வேண்டும். நாலரை அடி இடைவெளிப் பகுதியில் வெங்காயம், மிளகாய் மற்றும் பயறு வகைகளையும், 9 அடி இடைவெளிப் பகுதியில், பயறு, மிளகாய், வெங்காயம், துவரை, கம்பு, காய்கறி… போன்ற வீட்டுக்குத் தேவையான பயிர்களையும் ஊடுபயிராக சாகுபடி செய்யலாம்.
வாழை நடவு செய்யும் சமயத்திலேயே ஊடுபயிர்களையும் விதைத்து விட வேண்டும். விதைக்கிழங்கு மற்றும் ஊடுபயிர் விதைகள் ஆகியவற்றை பீஜாமிர்தத்தில் விதைநேர்த்தி செய்ய வேண்டியது அவசியம்.
வாழை விதைக்கிழங்குகளை 20 முதல் 25 செ.மீ. ஆழத்தில்தான் நடவு செய்ய வேண்டும். அதிக ஆழத்தில் பள்ளம் தோண்டக்கூடாது. சிறிய களைக்கொத்து மூலமாக கிழங்கின் அளவுக்கு குழி பறித்தால் போதுமானது. ஒவ்வொரு குழியிலும் ஒரு கையளவு எருவை இட்டு பின் கிழங்கை நடவு செய்ய வேண்டும்.
வாழை நடவு செய்தபின் காலி நிலப்பகுதி முழுவதிலும் மூடாக்கு இட்டு அதில் சிறிய துளை செய்துதான் ஊடுபயிர்களை விதைக்க வேண்டும். விதைத்தவுடன் ஜீவாமிர்தம் கலந்த நீரைப் பாசனம் செய்ய வேண்டும்.
அதன்பிறகு நிலத்தின் ஈரப்பதத்தைப் பொறுத்து பாசனம் செய்தால் போதுமானது. பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை பாசன நீரில் ஏக்கருக்கு 200 லிட்டர் என்ற அளவில் ஜீவாமிர்தத்தைக் கலந்து விட வேண்டும். அதிகமான அளவு ஜீவாமிர்தம் தயாரிக்க முடிந்தால், ஒவ்வொரு முறை பாசனம் செய்யும்போதும் கூட கலந்து விடலாம்.