பின்வரும் பயிர்களில் மகசூலை அதிகரிக்க என்ன செய்யலாம்?

 |  First Published Apr 25, 2017, 12:10 PM IST
What can be done to increase the yield in the following crops?



1.. தக்காளி

தக்காளியில் மகசூலை அதிகரிக்க, நடவு செய்த 15ம் நாள் ஒரு முறையும் பூக்கும் சமயம் ஒரு முறையும் டிரைக்காண்டினால் 1 மி.லிட்டர் / ஒரு லிட்டர் நீர் என்ற அளவில் தெளிக்க வேண்டும்.

Tap to resize

Latest Videos

2.. கத்தரி

கத்தரியில் மகசூலை அதிகரிக்க நடவு செய்த 15ம் நாள் ஒரு முறையும் பூக்கும் சமயம் ஒரு முறையும் டிரைக்காண்டினால் ஒரு மி.லிட்டர் / ஒரு லிட்டர் என்ற அளவில் தெளிக்க வேண்டும்

3.. மிளகாய்

மிளகாயில் பூக்கள் உதிர்வதைக் குறைத்து, மகசூலை அதிகரிக்க நாற்று நடவு செய்து 60-வது 90-வது நாள்களில் நாப்தலின் அசிடிக் ஆசிட் 10 பி.பி.எம் (10 மிலி / லிட்டர் நீர்) என்ற அளவில் தெளிக்க வேண்டும்

4. கொடிவகைப் பயிர்கள்

கொடிவகைப் பெண்பூக்கள் அதிகரிக்கவும், மகசூலை அதிகரிக்கவும், 2-வது, 4-வது, 6-வது இலை வரும் தருணங்களில் எத்திரால் 250 பி.பி.எம். (2.5மி.லி / 10 லிட்டர் நீர்) என்ற அளவில் தெளிக்க வேண்டும்.

5. புடல்

புடலங்காயில் பெண்பூக்கள் அதிகரிக்கவும், மகசூல அதிகரிக்கவும் விதைத்து 10வது நாள் ஒரு முறையும், 10 நாட்கள் கழித்து மறு முறையும் எத்திரால் 1 மிலி / 10 லிட்டர் தெளிக்க வேண்டும்.

click me!