** விந்து சேகரித்தல் மற்றும் பகுத்தாய்தல்
விந்துக்களை சேகரிக்க பல்வேறு முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. காலத்திற்கேற்ப சேகரிப்பு முறைகளும் புதிய முறைகள் பின்பற்றப்படுகிறது. பொதுவாக விந்து சேகரிக்க 3 முறைகள் பயன்பாட்டில் உள்ளன. அவைகளாவன.
** செயற்கை சினைப் பை மூலம் விந்து சேகரித்தல்
* மின்னூட்ட முறை
* மலப்புழை வழியே ஆண் இனப்பெருக்க உறுப்புப் பகுதியை பிசைதல் மூலம் சேகரிக்கலாம்.
* செயற்கை சினைப் பை மூலம்
* செயற்கை பை ஆனது கீழ்வரும் பகுதிகளைக் கொண்டுள்ளது.
* உறுதியான இரப்பரால் ஆன உருளை, இரண்டு பக்கத் துவாரங்களைக் கொண்டும், மேலும் அதன் மேல் பகுதி காற்று, நீர் சென்ற வர உள் மற்றும் வெளிப்பகுதியைக் கொண்டும் காணப்படும்.
* உள் இரப்பர் விந்துக்களை சேகரிக்கும் குடுவை
* விந்துச் சேகரிப்பிற்கு செயற்கை சினைப் பையை பயன்படுத்துவதற்கு முன்பு அவற்றை தகுந்த முறையில் கழுவி முறைப்படி சுத்தம் செய்து வைக்கவேண்டும். சினைப்பையை அமைக்க முதலில் உள் இரப்பை இரப்பர் உருளையில் இருக்கும்.
* ஒரு துவாரப் பகுதியின் வழியே கொண்டு சென்று மறு துவாரம் பகுதியின் வழியே வெளியே மடக்கவேண்டும். பிறகு இரப்பர் உருளையின் மேல்பகுதியில் உள்ள நீர்த் துவாரம் வழியே சூடேற்றப்பட்ட 45 டிகிரி செல்சியஸ் தண்ணீரை ஊற்றவேண்டும். பிறகு அளவுகள் குறிக்கப்பெற்ற விந்து சேகரிக்கும் குடுவையை செயற்கை சினைப்பையின் குறுகிய முனைப்பகுதியில் செருகவேண்டும்.
* பின்னர் செயற்கை சினைப்பையின் உள்பகுதியில் ஜெல்லியை தடவவேண்டும். அதன் மூலம் நீர்ப்பகுதியில் அழுத்தத்தை உருவாக்கலாம். இவ்வாறு செய்வதன் மூலம் இயற்கையான சினைப்பை அமைப்பை செயற்கை முறையில் உருவாக்கலாம்.
* ஒவ்வொரு முறை விந்து சேகரிக்கும் போதும் செயற்கை சினைப் பையின் வெப்பநிலையைச் சரிபார்த்துக்கொள்ளவேண்டும். காளைகள் தாமதித்தாலோ, செயற்கை சினைப்பையில் வெப்பநிலை குறைந்தாலோ விந்து வெளிப்படும் தன்மை மாறுகின்றது. அவ்வாறு விந்து வெளிப்பட்டாலும் வெளிவரும் விந்து சிறுநீர் போன்றவற்றில் அசுத்தம் அடைந்து உபயோகம் இல்லாமல் போக வாய்ப்புகள் அதிகம்.
** செயற்கை கருப்பை மூலம் விந்து சேகரிக்கும் செயல்முறை
* பசு அல்லது பொம்மை மாடு இருக்கும் இடத்திற்கு காளை மாட்டைக் கொண்டு வரவேண்டும். காளைகள் இனச்சேர்க்கைக்கு பசு அல்லது பொம்மை மாட்டின் மீது ஏறும் போது சுமார் 45 டிகிரி கோணத்தில் காளையில் இனச்சேர்க்கை உறுப்பிற்கு (ஆண்குறி) ஏற்றவாறு வலது கைப்பழக்கம் உள்ளவர்கள் இடது கையினால் பிடித்துக்கொள்ளவேண்டும்.
* பிறகு காளை இனச்சேர்க்கைக்கான பசு மீது ஏறும் போது, ஆண் குறியின் தோல் பகுதியைப் பிடித்து மேலும் காளையின் ஆண்குறியின் முனைப்பகுதி செயற்கை கருப்பையினுள் உள்ளே செல்ல வழிவகுக்க வேண்டும். இவ்வாறு செய்யும் போது, ஆண்குறியின் சிவந்த பகுதியைத் தொடாமல் இருப்பது நன்மை பயக்கும்.
* காளை ஏறி இறங்கிய பின்னர் செயற்கை கருப்பையில் உள்ள காற்றுத் துவாரத்தை திறப்பதன் மூலமும், நீர்த் துவாரத்தைத் திறப்பதன் மூலமும் நீரை வெளியேற்ற வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் செயற்கை கருப்பையிலுள்ள விந்துவானது விந்து சேகரிக்கும் குடுவை அதன் இணைப்பில் இருந்து அகற்றி அக்குடுவைக்கு எவ்வித அசுத்தம் ஏற்படாதவாறு, அதனை பஞ்சு கொண்டு துடைத்து ஆராய்ச்சிக்கூடத்திற்கு எடுத்துச் செல்லவேண்டும்.