ரோஜா செடியில் நல்ல வளர்ச்சியைக் காண வேண்டுமா? இதோ டிப்ஸ்…

 |  First Published Aug 7, 2017, 12:49 PM IST
Want to see good growth in the rose plant? Here are tips ...



ரோஜாக்களில் சமீபத்திய பயன்பாட்டில் பல ரகங்கள் உண்டு. இதில் முக்கியமாக ஆந்திர சிகப்பு வண்ண ரோஜா, அடுத்து அதிகமாக சாகுபடியில் உள்ளது பட்டன் ரோஜா. பட்டன் ரோஜா முள் இல்லாமல் இருக்கும் சந்தையில் நிலையான வரவேற்பு உள்ள மலர்.

ரோஜா பயிரிட நீர் தேங்காத மண் உகந்தது. முக்கியமாக மணல் மற்றும் களிமண் கலந்த மண் சிறப்பானது. ஆடி பட்டத்தில் நடுவது சிறப்பு. நடவு இடைவெளி பல வகையில் விடப்படுகிறது, நிலத்தின் அளவிற்கேற்ப. 3×3, 5×2, 4×4 அடி அளவில் பயிர்செய்யலாம்.

Tap to resize

Latest Videos

ரோஜா பல வருடங்கள் தொடர்ந்து மகசூல் தரக்கூடியது, அதனால் இயந்திரம் மூலம் களைகளை கட்டுப்படுத்த வசதியாக இடைவெளி விட்டு நடவு செய்யவேண்டும். அவ்வப்பொழுது சணப்பை மற்றும் அகத்தி இரண்டும் கலந்து விதைத்து பின் மடக்கி உழுது விட்டால் செடிகளுக்கு அதிகமான சத்துக்கள் கிடைக்கும்.

1×0.5 அளவு குழிகளில் மண் புழுஉரம் இரண்டு கிலோ, வேப்பம்புண்ணாக்கு அரைகிலோ சிறிது சுண்ணாம்பு தூள் கலந்து இட்டு பதியன் குச்சிகளை நடவேண்டும். குழுக்களை சுற்றி மண் இருக்கும் அளவிற்கு சுற்றிலும் நன்கு மிதித்து விட வேண்டும்.

ரோஜா செடி நட்ட பத்தாவது நாள் முதல் துளிர்கள் வர ஆரம்பிக்கும். பின்னர் மொட்டுகள் தோன்ற ஆரம்பித்து விடும்.

ரோஜாவை அதிகமாக தாக்கும் நோய்கள், சாறுஉறிஞ்சும் பூச்சி மற்றும் மாவுபூச்சி. கற்பூரகரைசல் தொடர்ந்து வாரம் ஒரு முறை தெளித்தால் எந்த பூச்சி தாக்குதலும் இருக்காது. அளவிற்கு அதிகமாக துளிர் மற்றும் மொட்டுகள் தோன்றும்.

மேம்படுத்தப்பட்ட அமிர்த கரைசல் வேரில் அளிப்பதன் மூலமாக அதாவது பாசன நீரில் கலந்து விட்டால் நல்ல வளர்ச்சியை காணலாம். தினமும் பூக்கள் பறிக்க வேண்டும்

பூ பூப்பது நின்ற உடன் கவாத்து செய்வது மிகவும் அவசியம். மண் தன்மைக்கு ஏற்ப தண்ணீர் பாய்ச்சவேண்டும். தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்வது அவசியம்.

 

click me!