பயிர் ஊக்கியான மீன் அமிலத்தை தயாரிக்க இந்த முறைகள் உதவும்…

First Published Aug 5, 2017, 1:14 PM IST
Highlights
These methods will help to prepare the crop strawberry acids ...


மீன் அமிலம் தயாரிக்கும் முறை

தேவையான பொருட்கள்:

1. 10 கிலோ மீன் கழிவு. எலும்புகள், முட்கள், துடுப்புகள் மற்றும் செதில்களை நீக்கிவிடவேண்டும்.

2. 12 கிலோ வெல்லம். உருண்டை வெல்லம் அல்லது அச்சு வெல்லம் பயன்படுத்தலாம்.

3. 25 லிட்டர் கொள்ளளவு கொண்ட பிளாஸ்டிக் கேன். அகலமான மூடி கொண்ட கேனாக இருக்க வேண்டும்.

4. 10 - 15 வாழைப்பழம். நன்கு கனிந்த எந்த வாழைப்பழமும் உபயோகிக்கலாம்.

செய்முறை:

முதலில் வெல்லத்தை நன்கு இடித்து பொடி செய்து கொள்ளவும். கேனின் அடியில் (முதல் லேயர்) நன்கு நுணுக்கிய 4 கிலோ வெல்லம் நிரப்ப வேண்டும். அதன்மேல் 4 கிலோ மீன் கழிவை இடவேண்டும் (இரண்டாவது லேயர்). 

மீன்கழிவின் மீது 3 கிலோ வெல்லம் (மூன்றாவது லேயர்) பிறகு 3 கிலோ மீன் கழிவு (நான்காவது லேயர்).  இதன் மீது 4 கிலோ வெல்லம் (ஐந்தாவது லேயர்). மீதமுள்ள மீன்கழிவுகளை பரப்பிவிடவும். 

இறுதியாக மீதமுள்ள 3 கிலோ வெல்லத்தை பரப்பிவிடவும். கண்டிப்பாக முதல் லேயர்ம் இறுதி லேயர்ம் வெல்லம் இருக்க வேண்டும். 

இறுதி லேயர்க்கு மேல் நன்கு கனிந்த வாழைப்பழத்தை பிசைந்து விடவும். பிறகு கேனை நன்றாக கற்று புக முடியாதவாறு மூடி விடவும்.

நாய், எலி, பூனை மற்றும் எறும்புகளிடம் இருந்து இதை பாதுகாத்திட வேண்டும். இதன் வாசனைக்கு எறும்புகள் அதிகம் வரும். அகலமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் இந்த கலவை உள்ள கேனை வைத்தால் எறும்புகளிடம் இருந்து காக்கலாம். 15 நாட்களில் இந்த கலவை தயார் ஆகிவிடும். அருகில் செல்லும்போது மாம்பழம் அல்லது பஞ்சாமிர்தம் வாசனை வந்தால் தயார் ஆகிவிட்டது என்று அர்த்தம்.

மீன் கழிவை வெல்லத்தில் உள்ள வேதி பொருட்கள் நன்கு நொதிக்க செய்து விடும். இந்த மீன் அமிலத்தில் 95 சதவிகிதம் நைட்ரஜன் உள்ளது. மீன் அமிலத்தை நுண்ணுயிர்களுடன் கூடிய யூரியா என்றும் அழைப்பார்கள். 

தழைச்சத்து மிகுந்து காணப்படும் இந்த மீன் அமிலம் பயிர்களுக்கு பல நன்மைகளை தரும். மீன் அமிலத்தை ஸ்பிரேய மூலமாக பயிர்களுக்கு தெளிப்பதால் பயிர்களின் வளர்ச்சி நன்றாக இருக்கும்.

உபயோகிக்கும் முறை:

இந்த மீன் அமிலத்தை அணைத்து பயிர்களுக்கும் கொடுக்கலாம். பயிர் 20 நாட்களுக்கு குறைவான வயதாக இருந்தால் 15 லிட்டர் தண்ணீருடன் 10 மில்லி கலந்து அடிக்க வேண்டும். 25 நாட்களுக்கே மேலான பயிர்களுக்கு 100 மில்லி என்ற அளவில் 15 லிட்டர் தண்ணீருடன் கலந்து அடிக்கவேண்டும். 

கரும்பு பயிருக்கு 250 மில்லி கலந்து குடுக்க வேண்டும். கம்பு, சோளம் ஆகியவற்றிற்கு 150 மில்லி கலந்து குடுக்க வேண்டும். இரு வித்திலை பயிர்களுக்கு 100 மில்லி கலந்து கொடுத்தால் போதுமானது.

மீன் அமிலத்தை தேங்காய்ப்பால் கடலை பிண்ணாக்கு கரைசலுடன் கலந்து கொடுப்பதால், காம்புகள் மிகுந்த வலிமை பெரும். இதனால் பூக்கள் உதிர்வது தவிர்க்கப்படுகிறது. மீன் அமிலம் பயிர்களுக்கு தெளிப்பதால் பூக்களின் மனம் அதிகமாக இருக்கும். இதனால் அதிக தேனீக்கள் மற்றும் வண்டுகள் கவரப்பட்டு மகரந்த சேர்க்கை நன்றாக இருக்கும். இதன் காரணமாக காய் பிடிப்பு நன்றாக இருக்கும்.

மீன் அமிலம் பைகளுக்கு தெளிக்கும் முன் கலை எடுத்து விடுவது முக்கியம்.

மீன் அமிலம் பயிர் ஊக்கி என்பதால் கலைகளும் நன்றாக வளர்வதற்கு வழிவகை செய்யும். தீவனப்புல் வளர்ப்பவர்கள் மீன் அமிலம் தெளிப்பதால் அபரிமிதமான வளர்ச்சியை பார்க்கலாம். மீன் அமிலம் தெளித்த நாட்கள் களைத்து தீவன புல்லை கால்நடைகளுக்கு கொடுக்கலாம்.

click me!