கோடையில் பயிர் செய்ய ஏற்ற காய்கறிகள்; அதிக மகசூல் கிடைக்குங்க…

Asianet News Tamil  
Published : Apr 28, 2017, 12:34 PM ISTUpdated : Sep 19, 2018, 03:12 AM IST
கோடையில் பயிர் செய்ய ஏற்ற காய்கறிகள்; அதிக மகசூல் கிடைக்குங்க…

சுருக்கம்

Vegetables to harvest in summer High yield

கோடையில் பயிர் செய்ய ஏற்ற காய்கறிகள் கத்தரி, வெண்டை. இவற்றை பயிர் செய்தால் அதிக மகசூல் கிடைக்கும்.

ஒவ்வொரு பருவ காலத்திற்கேற்ற பயிர்களை பயிர் செய்தால், அதிக மகசூலை பெறலாம். தற்போது, கோடைக்காலம் துவங்கியுள்ளது. இக்காலத்தில் பயிர் செய்ய வெண்டையும், கத்தரியும் உகந்த காய்கறிகள்

வீரிய ஒட்டு ரகங்கள்

1.. கத்தரியில் அர்கா நவ்ஜீத், அப்சரா, சாயா, சியாமல் என ஆறு ரகங்கள் உள்ளன.

2.. வெண்டையில் சக்தி, சோனாஸ், யு.எஸ்., 7109 ஆகிய இரு ரகங்கள் உள்ளன.

3.. கத்தரி பயிர் செய்ய மே – ஜூன், அக்டோபர் – டிசம்பர், ஜனவரி – மே ஆகிய மாதங்கள் சரியானது.

4.. வெண்டை பயிர் செய்ய பிப்ரவரி – ஏப்ரல், ஜூன் – ஆகஸ்ட் ஆகியவை உகந்த மாதங்களாகும்.

விதையளவு

1.. வெண்டை ஒரு ஹெக்டேருக்கு, 1.8 கிலோவும், கத்தரி ஒரு ஹெக்டேருக்கு, 200 கிராமும் பயன்படுத்த வேண்டும்.

2.. கத்தரிக்கு டி.விரிடி, 4 கிராம், சூடோமோனாஸ் 10 கிராம், அசோஸ்பைரில்லம், 100 கிராம், பாஸ்போ பாக்டீரியா, 100 கிராம் ஆகியவையும் பயன்படுத்த வேண்டும்.

3.. வெண்டைக்கு டி.விரிடி, 4 கிராம், அசோஸ்பைரில்லம், 400 கிராம் ஆகிய அளவுள்ள உரங்களை கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

4.. தினமும் ஒருமணி நேரம் அல்லது தேவைக்கேற்ப சொட்டுநீர் பாசனம் மூலம் நீர்ப்பாய்ச்ச வேண்டும்.

5.. கத்தரி, வெண்டை செடிக்கு காய்த் துளைப்பான், சிலந்தி பேன், சிவப்பு சிலந்தி பேன், இலைப்புள்ளி நோய், மஞ்சள் நரம்பு நோய் மற்றும் சாம்பல் ஆகிய நோய் தாக்கும்.

6.. இவற்றைக் கட்டுப்படுத்த, கார்பரில், புரோபினோபாஸ், குயினல்பாஸ், பெவிஸ்டின் ஆகிய பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்த வேண்டும்.

அறுவடை

1.. வெண்டை பயிரிட்ட, 90 முதல் 100 நாட்களிலும், கத்தரி பயிரிட்ட, 50 முதல் 120 நாட்களிலும் அறுவடை செய்யலாம்.

2.. வெண்டை ஒரு ஹெக்டேருக்கு, 25-30 டன்னும், கத்தரி ஒரு ஹெக்டேருக்கு, 50-60 டன்னும் மகசூல் கிடைக்கும்.

PREV
click me!

Recommended Stories

PM Kisan திட்டத்தில் விவசாயிகளுக்கு சர்ப்ரைஸ் கிப்ட்.. பட்ஜெட்க்கு பின்னர் உயரப்போகும் தொகை..?
Agriculture: ஏக்கருக்கு ரூ. 5 லட்சம் வருமானம்.!விவசாயிகளின் வாழ்வை மாற்றும் பாமாயில் சாகுபடி.!