கொத்தமல்லில் சாகுபடி செய்ய இந்த தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அதிக விளைச்சல் கிடைக்கும்…

 |  First Published Jan 19, 2017, 2:01 PM IST

இந்தியாவில் ஆந்திரப்பிரதேசம், தமிழ்நாடு, கர்நாடகா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கொத்தமல்லி சாகுபடி அதிகளவில் நடைபெறுகிறது.

தமிழகத்தில் பரவலாக பல்வேறு மாவட்டங்களில் கொத்தமல்லி விதைக்காகவும், பச்சை இலைகளுக்காகவும் பயன்படுகிறது.

Tap to resize

Latest Videos

கொத்தமல்லியின் இலைகள் உணவு வகைகளில் வாசனையை அதிகரிக்கவும். செரிமான சக்தியை அதிகரித்து பசியை தூண்டும் மருந்து பொருட்கள் தயாரிப்பிலும் பயன்படுகின்றன. சட்னி தயாரிப்பதற்கு கொத்தமல்லி இலைகளும், விதைகள் நறுமணமூட்டவும் பயன்படுத்தப்படுகின்றன.

அதிக தண்ணீர் சேமித்து வைக்கும் திறனுடன் கூடிய கரிசல் மண்ணில் கொத்தமல்லி மானாவாரி பயிராகப் பயிரிடப்படுகிறது. வெயில் காலங்கள் தவிர மற்ற எல்லா காலங்களிலும் இது இலைக்காக பயிரிடப்படுகிறது. ஆனால், வறண்ட குளிர்ச்சியான காலநிலையே விதை உற்பத்திக்கு உகந்ததாகும்.

கொத்தமல்லி பயிர் தமிழகத்தில் ஜூன் – ஜூலை, செப்டம்பர் – அக்டோபர் மாதங்களிலும், ஆந்திராவில் அக்டோபர் – நவம்பரிலும் பயிரிடப்படுகிறது. கொத்தமல்லி கோ1, கோ 2, கோ 4, ஜி.சி.2 போன்ற சில முக்கிய ரகங்கள் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் பயிரிடப்படுகிறது.

ஒரு எக்டருக்கு 10 முதல் 15 கிலோ வரை விதை தேவைப்படுகிறது. விதைகளின் முளைப்புத்திறனை அதிகரிக்க விதைகளை 12-24 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.

பிறகு விதைகளை இரு பகுதியாக உடைத்து, அதனுடன் 2 கிராம் திரம் சேர்த்து பின் விதைக்க வேண்டும். நீர் அதிகமுள்ள பகுதிகளில் 15/10 செ.மீ இடைவெளியில் இருக்குமாறு கொத்தமல்லி பயிரிடப்படுகிறது. மானாவாரியாக பயிரிடும் போது விதைகள் நேரடியாக விதைக்கப்படுகின்றன.

எக்டருக்கு 10 டன் தொழு எருவும், 10:40:20 கிலோ தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து ஆகிய உரங்களை இட வேண்டும். கொத்தமல்லி விதையை விதைத்த முதல் மூன்று நாட்கள் நீர்ப்பாய்ச்ச வேண்டும்.

விதைகளுக்காக பயிரிடும்போது விதைத்த 30 வது நாளில் களை எடுப்பது அவசியம். களை எடுக்கும்போது, ஒரு இடத்தில் இரண்டு செடிகளை மட்டுமே விட்டுவிட்டு மற்றவைகளை பொறுத்து மேலும் ஒன்று அல்லது இரண்டு முளைகளை எடுக்க வேண்டும்.

இப்பயிரை பூச்சிகள் அதிகளவில் தாக்குவதில்லை. நோய்களை பொறுத்தவரை தண்டுமுடிச்சு, மாவு நோய், வாடல் நோய் போன்றவை வராமலிருக்க நோய் பரப்பும் பூஞ்சாணமில்லாத நல்ல இரகங்களின் விதைகளை தேர்ந்தெடுத்து விதைக்க வேண்டும்.

இலைகளுக்காக பயிரிடும்போது செடியை 30-40 நாட்களில் முழுவதுமாக பிடுங்கி எடுக்க வேண்டும். விதைக்கெனில் விதைகள் காய்ந்து போகாமல் லேசாக பச்சையாக இருக்கும்போதே பயன்படுத்த வேண்டும்.

இலைகளுக்காக பயிரிடும்போது 6 முதல் 7 டன் இலைகள் ஒரு எக்டரில் இருந்து விளைச்சலாக கிடைக்கிறது. விதைக்காக பயிரிடும்போது இறவை பயிரிலிருந்து ஒரு எக்டருக்கு 500 முதல் 600 கிலோ விதைகளும் கிடைக்கும்.

மானாவாரிப் பயிரிலிருந்து ஒரு எக்டருக்கு 500 முதல் 600 கிலோ இலைகளும், மானாவாரி பயிரிலிருந்து ஒரு எக்டருக்கு 300 முதல் 400 கிலோ விதைகளும் கிடைக்கின்றன.  

click me!