சின்ன வெங்காயம் சாகுபடியில் அதிக விளைச்சல் பெற இந்த ஆலோசனைகளை முயற்சி செய்யுங்கள்…

try these-suggestions-to-get-the-highest-yield-in-the-c


அல்லியம் சீபா என்ற தாவரவியல் பெயர் கொண்ட வெங்காயத்தில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. உணவில் முக்கிய பங்கு வகிக்கும் சின்ன வெங்காயம் சாகுபடி குறித்த விவரங்ள் இதோ…

சின்ன வெங்காயம்:

Latest Videos

இதை ஏப்ரல், மே மாதங்களில் பயிரிடலாம். நல்ல வடிகால் வசதியுள்ள வண்டல் மண் மிகவும் ஏற்றது. வெப்பமான பருவநிலை, போதுமான மண் ஈரப்பதத்தில் இப்பயிர் நன்கு

வளரும். சின்ன வெங்காயத்தில் கோ 1 முதல் 5 வரை உள்ள ரகங்கள் மற்றும் மதுரை 1, பஞ்சமுகி ஆகிய ரகங்கள் உள்ளன. ஏக்கருக்கு 400 கிலோ விதை வெங்காயம் தேவை.

அடியுரமாக கடைசி உழவில் ஏக்கருக்கு 10 டன் தொழு உரம், 12 கிலோ தழைச்சத்து தரவல்ல 27 கிலோ யூரியா, 24 கிலோ மணிச்சத்து தரவல்ல 150 கிலோ சூப்பர் பாஸ்பேட், 12 கிலோ சாம்பல் சத்து தரவல்ல 20 கிலோ மூரேட் ஆப் பொட்டாஷ் உரங்களை இட வேண்டும்.

நன்கு உழுத நிலத்தில் 45 செ.மீ. இடைவெளியில் பார்கள் அமைத்து, பாரின் இருபுறமும் 10 செ.மீ. இடைவெளியில் வெங்காயத்தை ஊன்ற வேண்டும். முளை விட்டபின் வாரந்தோறும் நீர் பாய்ச்ச வேண்டும்.

அறுவடைக்கு 10 நாள்களுக்கு முன்பு நீர் பாய்ச்சுவதை நிறுத்த வேண்டும். விதைத்த 30-ஆம் நாள் ஏக்கருக்கு 12 கிலோ தழைச்சத்து தரவல்ல 27 கிலோ யூரியாவை மேலுரமாக இட வேண்டும்.

நோய்கள்:

இலைப் புள்ளி நோயைக் கட்டுப்படுத்த ஒரு லிட்டர் நீருக்கு மாங்கோசெப் இரண்டு கிராம் அல்லது காப்பர் ஆக்சி குளோரைடு இரண்டரை கிராம் இவற்றில் ஒன்றை ஒட்டும் திரவமான டீப்பால் ஒரு லிட்டர் நீருக்கு அரை மி.லி. என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.

மகசூல்:

சின்ன வெங்காயம் நடவு செய்த 70 முதல் 90 நாள்களில் 6 முதல் 7 டன் மகசூல் கிடைக்கும்.

எனவே, விவசாயிகள் இந்த தொழில்நுட்பங்களைக் கடைபிடித்து, மருத்துவப்பயன் கொண்ட வெங்காய சாகுபடியை மேற்கொண்டு, உயர் மகசூலும், அதிக லாபமும் பெறலாம்.

vuukle one pixel image
click me!
vuukle one pixel image