மூங்கில் புல் வகையை சேர்ந்த தாவரம். வெப்ப மண்டலத்தில் நன்கு வறட்சியை தாங்கி வளரும் இயல்பு உடையது. மூங்கிலில் பல வகைகள் உள்ளன. அதிகமாய் வளர்ப்பது முள் இல்லாத மூங்கில் மற்றும் போல் மூங்கில்.
ஆடி பட்டத்தில் நடவு செய்வது சிறப்பு. ஏனெனில் ஆடியில் அவ்வப்போது பெய்யும் மழையால் நன்கு வேர் பிடித்து கோடை காலம் வருவதற்குள் வறட்சி தாங்கும் அளவிற்க்கு வளர்ந்து விடும்.
undefined
மூங்கில் நடவு செய்யும் பொழுது செடிக்கு செடி மற்றும் வரிசைக்கு வரிசை இடைவெளி 25 அடி இருக்குமாறு நட வேண்டும்.
கண்டிப்பாக ஒவ்வொரு விவசாயியும் தன் வயல் ஓரங்களில் வளர்க்க வேண்டிய மரம். மூங்கில் மற்ற பயிர்களின் வளர்ச்சியை பாதிக்கும், அதனால் விளைபயிர்களுக்கு தொந்தரவு இல்லாத இடத்தில் மூங்கிலை வளர்க்க வேண்டும்.
ஆக்சிஜன் அதிகம் வெளியிடும் மரங்களில் இதுவும் மூங்கிலும் ஒன்று. மூங்கில் வளர்ப்பது சுற்று சூழலுக்கு மிகுந்த நன்மை பயக்கும். மூங்கிலிலிருந்து வருமானமும் பெறலாம்.
முள் இல்லாத மூங்கில்:
முள் இல்லாத மூங்கில் அதிக உயரம் வளர்வது இல்லை. ஆனால் இதன் பயன்பாடு அதிகம். இந்த வகை மூங்கில் குச்சியின் நடுவில் இடைவெளி இருக்காது. இதனால் விவசாய கருவிகளான கத்தி மற்றும் மண்வெட்டி போன்றவற்றின் கைப்பிடிகள் செய்வதற்கு உகந்தது.
கூரை வீடுகள் கட்டுவதற்கும் பயன்படுகிறது. பந்தல் காய்கறிகள் சாகுபடி செய்ய பந்தல் அமைக்க இந்த முள் இல்லாத கெட்டி மூங்கில் அதிகம் பயன்படுத்த படுகிறது. குறைந்தது மூன்று வருடம் நிலைத்து நிற்க கூடியது. இதனால் விவசாயிகளுக்கு செலவில்லாத ஒரு பந்தல் அமைகிறது.
போல் மூங்கில்:
அடுத்து நடுப்பகுதியில் போல் உள்ள மூங்கில்கள் அதாவது நடுப்பகுதியில் இடைவெளி உள்ள முங்கில்கள் வீடு கட்டவும் கூடைகள் பின்னுவதற்கும் பயன்படுத்தபடுகின்றன.
நட்ட ஐந்தாம் வருடத்தில் இருந்து வெட்டி விற்பனை செய்யலாம். மூங்கில் தொடர்ந்து அறுபது வருடங்கள் வரை உயிர் வாழும். மானாவரி நிலத்தில் மூங்கில் பயிரிட்டால், பயிரிட்ட ஐந்தாம் ஆண்டு முதல் தொடர்ந்து அறுபது வருடங்கள் வருமானம் பெறலாம்.
நன்கு முற்றிய மூங்கில்களில் இருந்து மூங்கில் அரிசி எடுக்கப்படுகிறது. இந்த அரிசியானது மிகவும் சத்து உடையது. அதிக சுவையாக இருக்கும். சாதாரண அரிசி போன்று சமைத்து உண்ணலாம்.
அடுத்து மூங்கில்களில் இருந்து உதிரும் இலைகள் மண்புழு உரம் தயாரிக்க பயன் படுகின்றது.
உரத்தின் தரமானது மற்ற தழைகள் மூலம் தயாரிப்பததை விட தரமானதாக இருக்கும்.
உயர் தர காகிதம் தயாரிக்க மற்றும் ரூபாய் நோட்டு தயாரிப்புக்கும் பயன்படுத்தப்படுகிறது.