ஆப்ரிக்கா நாட்டைச் சேர்ந்த மர இனம். தமிழகத்தில் தற்போது மிகவும் பிரபலமாகி வருகிறது. பலரால் விரும்பி வளர்க்கப்படுகிறது.
மகோகனி மிக வேகமாக வளரும் மர வகைகளுள் ஒன்று. அதிக உயரம் அதாவது ஐம்பது அடிக்கு மேல் வளரும் தன்மை கொண்டது.
undefined
மகோகனி நட்ட பத்து வருடம் முதல் அறுவடை செய்யலாம். விரைவில் வைரம் பாயும் தன்மை கொண்டது. அழகான வளையங்கள் உடன் இருக்கும். இதனால் அதிக லாபம் கிடைக்கும்.
மகோகனியின் இலைகள் மருத்துவ குணம் வாய்ந்தவை. வறட்சி நன்கு தாங்கி வளரும் தன்மை உடையவை. அதிக அளவில் விதைகள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்பட்டு கன்றுகள் விற்பனை செய்யப்படுகின்றன.
அனைத்து வகையான வீட்டு உபயோக பொருட்கள் தயாரிக்க பயன்படுத்த படுகிறது. தேக்கு மரத்திற்கு சமமான சந்தை மதிப்பு உடையது. மிக உறுதியான மரமும் ஆகும்.
தரையில் இருந்து முப்பது அடிகள் உயரம் விட்டு, அதற்கு மேல் துண்டாக வெட்டிவிட்டு பின் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பக்க கிளைகள் கழித்து வந்தால் இயற்கை சீற்றத்தால் பாதிக்காமல் காக்கலாம். வயல் ஓரங்களிலும் நிழலுக்காகவும் வளர்க்கப்படுகிறது.