பண்ணை வேலைக்கான இந்தியா மாட்டு இனங்கள்
1.. அம்ரித்மஹால்
** கர்நாடகாவில் அதிகம் காணப்படுகிறது.
** உழவிற்கும், போக்குவரத்திற்கும் நன்கு ஏற்றதாகும்.
2.. அல்லிகார்
** கர்நாடகாவின் டும்கூர், ஹாசன், மைசூர் மாவட்டங்களில் அதிகம் காணப்படுகிறது.
3.. காங்கேயம்
** தமிழ்நாட்டின் கோயமுத்தூர், ஈரோடு, நாமக்கல், கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் அதிகம் காணப்படுகிறது.
** உழவிற்கும், போக்குவரத்திற்கும் ஏற்றதாகும். நல்ல கடுமையான சூழ்நிலையை தாங்குகிறது.
அயல்நாட்டு கறவை இனங்கள்
1.. ஜெர்சி
26 – 30 மாதம் முதல் ஈனுகிறது.
கறவை கால இடைவெளி : 13 – 14 மாதங்கள்
பால் உற்பத்தி – 5000 – 8000 கிலோ
ஜெர்சி இனம் ஒரு நாளுக்கு 20 லிட்டர் பால் கொடுக்கிறது. ஆனால் ஜெர்சி கலப்பினங்கள் ஒரு நாளுக்கு 8 – 10 லிட்டர் பால் கொடுக்கிறது.
இந்தியாவில், இவ்வினம், வெப்பம் மற்றும் ஈரப்பதம் நிறைந்த பகுதிகளில் நன்கு ஒத்து வாழ்கிறது.
2.. ஹோல்ஸ்டீன் ப்ரிசியன்
இவ்வினம் ஹாலந்து நாட்டைச் சார்ந்தது.
பால் உற்பத்தி 7200 – 9000 கிலோ
பால் உற்பத்தியைப் பொருத்த வரை, அயல் நாட்டு இனங்களில் இது சிறந்ததாகும்.
சராசரியாக ஒரு நாளுக்கு 25 லிட்டர் பால் கொடுக்கிறது. ஆனால் கலப்பினங்கள் 10-15 லிட்டர் பால் கொடுக்கின்றன.
டெல்டா மற்றும் கடலோர பகுதிகளுக்கு ஏற்றதாகும்.