இந்தியாவில் இருக்கும் புகழ்பெற்ற கருவை மாட்டு இனங்கள் இதோ உங்களுக்காக...

Asianet News Tamil  
Published : Jan 03, 2018, 01:43 PM ISTUpdated : Sep 19, 2018, 01:46 AM IST
இந்தியாவில் இருக்கும் புகழ்பெற்ற கருவை மாட்டு இனங்கள் இதோ உங்களுக்காக...

சுருக்கம்

Cow breeding breeds in India

இந்தியாவில் இருக்கும் புகழ்பெற்ற கருவை மாட்டு இனங்கள் 

1.. சாஹிவால்

அதிகமாக பஞ்சாப், அரியானா, உத்திரபிரதேசம், டெல்லி, பீஹார் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் காணப்படுகிறது.

பால் உற்பத்தி – கிராம சுழலில் : 1700 கிலோ 

வணிக பால்பண்ணை சூழலில்: 2100 கிலோ

கன்று ஈனும் காலம்: 32-36 மாதம் முதல் கன்று ஈனுகிறது

கறவை கால இடைவெளி – 15 மாதம்.

2.. கிர்

தெற்கு கத்தியவாரில் உள்ள கிர் பகுதிகளில் அதிகமாகக் காணப்படுகிறது.

பால் உற்பத்தி – கிராம சூழல் : 900 கிலோ 

வணிக பால்பண்ணை சூழல் : 1600 கிலோ

3.. தார்பர்கர்

ஜோத்பூர், கச் மற்றும் ஜெய்சால்மர் பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது.

பால் உற்பத்தி – கிராமசூழல் :1660 கிலோ 

வணிக பால் பண்ணை: 2500 கிலோ

4.. சிவப்பு சிந்து

பஞ்சாப், அரியானா, கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா மற்றும் ஒரிசா பகுதிகளில் அதிகமாகக் காணப்படுகிறது.

பால் உற்பத்தி – கிராம சூழல் :1100 கிலோ 

வணிக பால் பண்ணை : 1900 கிலோ

கறவை மற்றும் பண்ணை வேலைக்கான இனங்கள்

5.. ஓங்கோல்

ஆந்திர மாநில நெல்லூர், கிருஷ்ணா, கோதாவரி மற்றும் குண்டூர் மாநிலங்களில் அதிகமாகக் காணப்படுகிறது.

பால் உற்பத்தி – 1500 கிலோ

வண்டி இழுப்பதற்கும், உழவிற்கும் காளை மாடுகள் ஏற்றதாகும்.

6. அரியானா

கர்னால், ஹிசார் மற்றும் குர்கான் மாவட்டங்கள் (ஹரியானா), டெல்லி மற்றும் மத்தியபிரதேசம்

பால் உற்பத்தி : 1140 – 4500 கிலோ

வேகமான உழவிற்கும், சாலை போக்குவரத்திற்கும் காளை மாடுகள் ஏற்றதாகும்.

7.. கங்ரெஜ்

குஜராத் மாநிலத்தில் அதிகம் காணப்படுகிறது.

பால் உற்பத்தி – கிராம சூழல் : 1300 கிலோ 

வணிக பால் பண்ணை : 3600 கிலோ

கன்று ஈனும் காலம்: 36 – 42 மாதம் முதல் ஈனுகிறது.

கறவை கால இடைவெளி : 15 – 16 மாதங்கள்

காளைகள் திடமாகவும், வேகமாகவும், சுறுசுறுப்பாகவும் வேலை செய்யக்கூடியவை.

8.. டியோனி

ஆந்திர மாநில வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது.

பசுக்கள் கறவைக்கும், காளைகள் பண்ணை வேலைக்கும் ஏற்றதாகும்.

PREV
click me!

Recommended Stories

Govt Scheme: ரூ.4,000 அரசு மானியம் வேண்டுமா? இந்த ஆவணங்கள் உங்களிடம் இருந்தால் போதும்!
Govt Scheme: ரூ.15,000 வரை மானியம்..! விவசாயிகள் உடனே விண்ணப்பிக்க வேண்டிய திட்டம் இது..!