பால் கறப்பில் பயன்படுத்தப்படும் இந்த இயந்திரத்திற்கு மௌசு அதிகம்...

 |  First Published Jan 4, 2018, 1:34 PM IST
This machine used in milk stains is a lot of muscle ...



மாடுகளுக்கு பாதிப்பில்லாமல் பால் கறக்கும் இயந்திரத்துக்கு கிராமப்புற விவசாயிகளிடம் வரவேற்பு அதிகரித்து வருகிறது.

’ஒரு கறவை மாடு இருந்தால் ஒரு குடும்பம் பிழைத்து கொள்ளலாம்’ என கிராமத்தில் பேச்சு வழக்கில் கூறுவதுண்டு. மாடு வளர்ப்போர் கடந்த 15 ஆண்டுக்கு முன் மாடுகளை பராமரிக்கவும், பால் கறக்கவும் பண்ணை ஆட்களை நியமித்து இருந்தனர்.

நாகரிக வளர்ச்சி, கல்வி அறிவு, வெளிநாட்டு மோகம் ஆகிய காரணத்தால், இத்தொழிலில் ஈடுபடுவதை ஏராளமான கிராமவாசிகள் கவுரவ குறைச்சலாக கருதி வருகின்றனர். அதன் விளைவாக 10 முதல் 20 மாடுகள் வரை இருந்த ஒரு விவசாயி வீட்டில் தற்போது ஒன்று, இரண்டு மாட்டை பார்ப்பதே அரிதாக உள்ளது. 

மாடுகளில் இருந்து பால் கறக்க ஜெர்மன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள நவீன இயந்திரத்தை பயன்படுத்துகின்றனர். கிராமப்புறங்களில் மாடு வளர்க்கும் விவசாயிகளுக்கு இது சாத்தியமில்லை. பால் கறக்க ஆள் கிடைக்காததால் மாடு வளர்ப்பதை ஏராளமான விவசாயிகள் நிறுத்தி விட்டனர்.

வீட்டு உபயோகத்துக்கு மட்டும் ஒன்றிரண்டு மாடுகள் வைத்துள்ளனர். இக்கட்டான இந்நிலையில், தமிழகத்தில் முதன் முறையாக விவசாயிகளுக்கு பயன் அளிக்கும் வகையில், குறைந்த விலையில் ரூ.15 ஆயிரத்துக்கு பால் கறக்கும் இயந்திரம் விற்பனைக்கு வந்துள்ளது. 

மின்சாரம் மற்றும் கையால் இயக்கப்படும் இந்த இயந்திரத்தில் பால் கறக்க, ஒரு மாட்டிற்கு மூன்று நிமிடங்கள் மட்டும் ஆகும். இயந்திரம் இயங்க துவங்கியவுடன் கம்பரஸரில் இருந்து வரும் காற்று, ‘ஏர் டேங்கில்’ நிரம்பும். 

டேங்கில் இருந்து டியூப் வழியாக செல்லும் காற்று, மாட்டின் காம்பில் பொருத்தப்பட்டுள்ள கறவை செட் குழாய்க்கு சென்று அங்கிருந்து ‘ஏர்’ இழுவை திறன் மூலம் பால் காம்பில் சுரக்கும் பாலை கறந்துவிடும்.கறந்த பாலை சேகரிக்க இயந்திரத்தில் 20 லிட்டர் கேன் பொருத்தப்பட்டுள்ளது.

ஒரு இயந்திரத்தில் 300 லிட்டர் பால் கறக்க முடியும். ஒரே நேரத்தில் இரண்டுமாடுகளுக்கு பால் கறக்கும் இயந்திரமும் உள்ளது. தற்போது ஆள் பற்றாக்குறையை தவிர்க்க, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் மாடு வளர்ப்போர், குறைந்த விலையில் கிடைக்கும் இந்த சிறிய நவீன கறவை இயந்திரத்துக்கு மாறி வருகின்றனர்.

click me!