1991-ஆம் ஆண்டில் சி.பி.டி(CBD-Convention on Bio-logical diversity) அல்லது ரியோ பூமி மாநாட்டு (Rio-summit or Earth summit) முடிவு ஒப்பந்தத்தின்படி அறிவுசார் சொத்துரிமை சட்டங்கள் (Intellectual property Rights-TRIPS) கொண்டுவரப்பட்டு 1995 முதல் நடைமுறைக்கு வந்தன.
அதன்படி, "எழுத்து வடிவில் வெளியிடப்படாத அல்லது காப்புரிமை பெறப்படாத எந்தவொரு புதிய கண்டுபிடிப்பும் (எ.கா, தாவரங்களில் இருந்து பெறப்படும் மருத்துவ வேதிப் பொருள்கள், நோய்க்கட்டுப்பாடு போன்றவற்றைப் பற்றிய கண்டு பிடிப்பு) கண்டுபிடிப்பவரின் உரிமையாகிவிடும்.
அந்தத் தாவரம் உலகில் எந்த நாட்டு பாரம்பரியத்துக்குச் சொந்தமாக இருந்தாலும், இதுதான் சட்டம். வேம்பு, மஞ்சள் போன்றவற்றின் மருத்துவப் பண்புகள் பற்றி தமிழர் அறிந்திருந்தாலும், அது முறையாக, அங்கீகரிக்கப்படாத வரையில், வேறொருவர் அவற்றைப் பற்றி முறையாக மேற்க்கொண்ட கண்டுபிடிப்பு, காப்புரிமையில் நாம் சொந்தம் கொண்டாட முடியாது.
எனவே, நம்முடைய பாரம்பரிய சித்த, ஆயுர்வேத தாவரங்களின் மருத்துவப் பண்புகளையும், அப்பண்புகளுக்கான வேதியியல் அடிப்படைகளையும் மருந்து தயாரிப்பு முறைகளையும் தகுந்த ஆய்வாக பிரசுரித்தல், காப்புரிமை பெறுதல் போன்றவற்றுக்கு நாம் அனைவரும் முன்னுரிமை கொடுக்க வேண்டும்.
இப்படிதான் மஞ்சளில் இருக்கும் மருத்துவத்தை காகிதத்தில் எழுதிவிட்டு மஞ்சளே தனக்குதான் சொந்தம் என்று கொண்டாடுகின்றனர்.