நீடித்த நவீன கரும்பு சாகுபடியை அனைத்து விவசாயிகளும் விரும்பி செய்ய இதுதான் காரணம்...

 |  First Published Apr 9, 2018, 1:32 PM IST
This is the reason why all the farmers preferred the sustainable modern sugarcane cultivation ...



கரும்பு சாகுபடியில் இடுபொருள் மற்றும் நீர்பாசனம் போன்றவற்றை குறைத்து மகசூல் மற்றும் விவசாயிகளின் வருமானத்தை பெருக்கிட “நீடித்த நவீன கரும்பு சாகுபடி’ என்ற தொழில்நுட்பம் வந்துவிட்டது.

கரும்பில் இருந்து சர்க்கரை மட்டும் தயாரித்த காலம் கடந்து விட்டது. தற்போது கரும்புச்சாறு கழிவில் மொலாசஸ், சாக்லெட் மற்றும் கரும்பு கையில் இருந்து மின்சாரம், இயற்கை உரம், காகிதம் என கரும்பின் அனைத்து பாகங்களும் பயன்படுகிறது. சமுதாயத்தின் பெரிய பொருளாதார ரீதியாக கரும்பு பயிர் உள்ளது.

நீடித்த நவீன கரும்பு சாகுபடி 

நீடித்த நவீன கரும்பு சாகுபடி முறையானது கரும்பு சாகுபடியில் ஒரு புதிய அணுகுமுறை மற்றும் நீர் சேமிப்பு வழிகளில் ஒரு புதிய முயற்சி. இந்த முறையில் விளைச்சலை அதிகரிப்பதோடு நீர்நிலை ஆதாரங்கள் முற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்கும் உறுதுணையாய் இத்தொழில் நுட்பம் இருக்கிறது. 

நீடித்த நவீன கரும்பு சாகுபடியானது குறைந்த அளவு தண்ணீரை உபயோகிப்பது சரியான அளவு ஊட்டச்சத்து மற்றும் பயிர் பராமரிப்பின் மூலம் அதிக மகசூல் பெற வழிவகை செய்யும் ஒரு சாகுபடி முறை.

சாதாரணமாக ஒரு ஏக்கரில் கரும்பு நடவு செய்ய வேண்டுமானால் நான்கு டன்கள் கரும்பு தேவைப்படும். இன்றைய கரும்பு விலை டன் ஒன்றுக்கு ரூ.2,250. இதன்படி நான்கு டன்களுக்கு ரூ.10,200 தேவை. ஆனால் நீடித்த நவீன கரும்பு சாகுபடி முறையில் கரும்பு நாற்றுகள் நடும்பொழுது ஒரு ஏக்கருக்கு சுமார் 5000 நாற்றுகள் போதுமானது. 

நாற்று ஒன்றின் விலை ரூ.1.40. இதன்படி 5,000 நாற்றுகளுக்கு ரூ.7,000 போதும். மேலும் 30 நாட்கள் வயதுள்ள நாற்றுகளாக நடுகின்றபடியால் ஒரு மாதத்திற்குண்டான பயிர் பராமரிப்பு செலவு குறைவதோடு கரும்பு வெட்டு மாதமும் ஒரு மாத்திற்கு முன்னரே வருகிறது.

கரும்பினை நேரடியாக அப்படியே வயலில் நடும்பொழுது நடும் அனைத்து பருக்களும் அப்படியே முளைக்கும் என்ற உத்திரவாதம் இல்லை. ஆனால் நாற்றுகளாக நடும் பொழுது அனைத்து நாற்றுகளும் முளைப்புத்திறன் கொண்டதாக உள்ளது. 

கரும்பு கரணையாக நடுகின்றபொழுது உண்டாகும் கூடுதல் பணியாளர்களை விட நாற்றுகளாக நடும் பொழுது குறைவான பணியாளர்களே போதும். ஒரு ஏக்கருக்குண்டான 5,000 நாற்றுகளை ஆறு நபர்கள் நான்கு மணி நேரத்தில் நடவு செய்து விடலாம். 

மேலும் பருக்கள் அனைத்தும் முறைப்படி விதை நேர்த்தி செய்து நாற்றுகளாக்கப்படுவதால் கரும்பு பயிரில் நோய் தாக்குதலானது பெருமளவு கட்டுப்படுத்தப்படுகிறது.

நீடித்த நவீன கரும்பு சாகுபடி முறையில் கரும்பு நாற்றுகளாக நட்ட வயலில் ஒரு ஏக்கருக்கு கரும்பு மகசூலானது சுமார் 70 டன்கள் வரை கிடைக்கிறது. இதனால் விவசாயிக்கு அதிக லாபம் கிடைப்பதோடு சர்க்கரை ஆலைகளுக்கும் சர்க்கரை கட்டுமானம் அதிகம் கிடைத்து விவசாயிகளுக்கு கரும்புக்கு அதிக விலை கொடுக்க வழிவகை செய்கிறது. 

நீடித்த நவீன கரும்பு சாகுபடி மூலம் சொட்டு நீர் பாசனம் அமைக்கவும், நாற்றுக்கும் தமிழக அரசின் மானியம் உண்டு. 
 

click me!