அடை வைக்க முட்யை இப்படிதான் தேர்ந்தெடுக்கணும். எப்படி?

 |  First Published Nov 25, 2017, 12:26 PM IST
This is the choice of mud. How?



அடை வைப்பதற்கான முட்டைகளைத் தேர்ந்தெடுத்தல்

இனப்பெருக்கக் கோழிகள் இட்ட அனைத்து முட்டைகளும் அடைக்கு வைக்க முடியாது. 

உடைந்த, அழுக்கான, ஒழுங்கற்ற வடிவமுடைய முட்டைகளை அடைகாப்பதற்கு பொதுவாக வைக்கப்படுவதில்லை. 

மிகவும் சிறிய அல்லலமு மிகவும் பெரிய முட்டைகளும் நடுத்தர அளவுடைய முட்டைகளுடன் ஒப்பிடும் போது நன்றாகக் குஞ்சு பொரிப்பதில்லை. 

மெல்லிய ஓடுடைய, அதிக ஓட்டைகள் உடைய முட்டைகளும், அவற்றிலிருந்து ஏற்பட்ட அதிகப்படியான நீர் இழப்பு காரணமாக சரியாகக் குஞ்சு பொரிப்பதில்லை.

அடை காக்கும் முட்டைகளைக் கையாளுதல் மற்றும் சேமித்தல்

அடை வைக்கும் முட்டைகளைக் கோழிகள் இட்ட பிறகு அவற்றின் தரத்தை மேம்படுத்த முடியாது. ஆனால் அவற்றின் குஞ்சு பொரிக்கும் திறனை சில முறைகளைப் பயன்படுத்தி குறைக்காமல் பார்த்துக்கொள்ளலாம். 

கருவுற்ற அடைகாக்கும் முட்டைகளை சேமித்து வைத்தல்

பொதுவாக குஞ்சு பொரிப்பகங்களில் முட்டைகளை கோழிகள் இட்டவுடனேயே அடை வைப்பதில்லை. பெரும்பாலான குஞ்சு பொரிப்பகங்கள் முட்டைகளை வராத்திற்கு இரண்டு முறை மட்டுமே அடை வைக்கின்றன. 

கருவுற்ற முட்டைகளை ஒரு வாரத்திற்கு சேமித்து வைக்க வேண்டுமென்றால் அவற்றை முட்டைகள் சேமித்து வைத்திருக்கும் அறையில் 65 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையிலும் 75 சதவிகிதம் ஈரப்பதத்தில் வைத்திருக்க வேண்டும். 

பத்து நாட்களுக்குக் குறைவாக முட்டைகளை சேமித்து வைக்கும் போது அவற்றின் அகலமான முனை மேலே இருக்குமாறு வைத்திருக்க வேண்டும். 

பத்து நாட்களுக்கு மேலாக முட்டைகளை சேமித்து வைக்கும் போது அவற்றின் குறுகிய முனை மேலாக இருக்குமாறு வைத்திருந்தால் முட்டைகளின் குஞ்சு பொரிப்புத் திறன் அதிகமாகும்.

click me!