அசோலாவை பாத்தி முறையில் அமைக்க இதுதான் சிறந்த வழி...

 |  First Published Mar 6, 2018, 1:42 PM IST
This is the best way to set up Azolla ...



அசோலா பாத்தி அமைக்க தேவையான பொருட்கள்:-      

அசோலா 1.5 கிலோ

Tap to resize

Latest Videos

செம்மன் 30 கிலோ

செங்கற்கள் 40

பழைய சிமெண்ட் சாக்குகள் 5-6

ஷில்பாலின் ஷீட் (9*6 அடி 150 ஜி.எஸ்.எம். ஒளிக்கதிர்கள் பாய்ச்சியது)

மாட்டுச்சாணம் 4-5 கிலோ

தண்ணீர் தேவையான அளவு

அசோப்பெர்ட் 15-20 கிராம்

அசோப்பாஸ் 40 கிராம்

பாத்தி அமைத்தல்

** பாத்தி அமைக்கும் இடத்தில் நிலத்தைச் சுத்தப் படுத்தி சுமார் 10செ.மீ. உயரம் வருமாறு செங்கல்லை பக்கவாட்டில் நிற்குமாறு வைத்து ஒரு செவ்வக வடிவ பாத்தியை உருவாக்க வேண்டும். பாத்தியின் நீள அகலம் 9*6 அடி இருக்க வேண்டும்.

** அடியில் பழைய சிமெண்ட் சாக்கு அல்லது பிளாஸ்டிக் பேப்பர் ஆகிடவற்றை விரித்து அதன் மேல் UVஒளிக்கதிர்களைப் பாய்ச்சிய ஷில்பாலின் ஷீட்டைவிரிக்கவும்.பக்கவ்வாட்டில் செங்கல்கள் மேல் உள்ள ஷில்பாலின் சீட்டின் விளிம்புகள் பாத்தியின் உட்புறமாக சரிந்து விடாமல் இருக்க அதன் மீது செங்கற்களை சிறிது இடைவெளி விட்டு வைக்கலாம்.

** இவ்வாறு தயாரிக்கப்பட்ட தொட்டியில் நன்கு சலிக்கப்பட்ட மண்ணை சமமாக பரப்ப வேண்டும். 

** 2-3 நாட்களான மாட்டுச்சாணத்தை 20 லிட்டர் தண்ணீரில் கரைத்து அதனுடன் 40 கிராம் அசோப்பாஸ்,20 கிராம் அசோபெர்ட் ஆகியவற்றை  கலக்க வேண்டும். இதணை ஷில்பாலின் தொட்டியில் நான்கு ஓரங்களிலும் விடவும்.

 ** தேவையான அளவு தண்ணீர் விட்டு நீர்மட்டம் 7-10 செ.மீ. உயரம் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். இப்போது அசோலா பாத்தி தயாராக உள்ளது.

** சுமார் 1.5 கிலோ நல்ல தரமான  அசோலா விதையை பாத்தியில் பரவலாக தூவ வேண்டும்.

** அசோலா 7 நாட்களில் பாத்தி முழுவதும் பாய் விரித்த்து போன்று பரவி விடும்.

அறுவடை செய்தல்

** முதலில் இட்ட 1 கிலோ அசோலா 7 நாட்களில் 8-10 கிலோ வரை வளர்ந்து விடும். அதன் வளர்ச்சியைப் பொருத்து 7நாட்களில் 1-1.5 கிலோ வரை தினமும் அறுவடை செய்யலாம். 

** ஒரு சதுர செ.மீ. ஓட்டை அளவுள்ள சல்லடையை பயன்படுத்தி அறுவடை செய்யலாம்.

** அசோலாவை  சல்லடை கொண்டு அலசும்போது கிடைக்கும் நீரில் உள்ள சின்ன சின்ன அசோலா நாற்றுகளை திரும்ப தொட்டியில் ஊற்றலாம்.

** அசோலாவின்ஆண்டு உற்பத்தி ஒருஹெக்டருக்கு 1000மெட்ரிக்டன்

** அசோலாவின் ஒரு நாள் உற்பத்தி 300 கிராம்/ச.மீ.

click me!