இறால் வளர்ப்பு தொழிலில் ஈடுபடும்முன் நீங்கள் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயங்கள்...

 |  First Published Feb 26, 2018, 1:56 PM IST
Things you need to know before engaging in shrimp farming ...



இறால் வளர்ப்பு

கடற்கரையோரங்கள், கடலும் ஆறும் சந்திக்கும் முகத்துவாரங்கள் ஆகிய பகுதிகளில் மட்டுமே இருந்த இறால் வளர்ப்பு, தற்போது உள்நாட்டுப் பகுதிகளிலும் பரவலாகி வருகிறது. 

வெளிநாட்டு விற்பனை வாய்ப்பும் அதிகம் என்பதால், நன்னீர் இறால் வளர்ப்பு மூலம் நல்ல லாபம் கிடைக்கவே பலரும் இதில் ஈடுபட்டு வருகிறார்கள். 

இவர்களில், கொஞ்சம் வித்தியாசமாக குட்டையில் மீன்களோடு சேர்த்து இறாலை வளர்த்து, கூடுதல் லாபம் ஈட்டி வருகிறார்கள் தஞ்சாவூரைச் சேர்ந்தவர்கள்.

தஞ்சாவூர் - பூதலூர் சாலையில் பதினைந்தாவது கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பிள்ளையார்நத்தம் கிராமத்தில் அமைந்திருக்கும் இறால் பண்ணையை பார்த்தால் உங்களுக்கே தெரியும்.

2003-ம் வருசம் வரைக்கும் நன்னீர் இறால் வளர்க்க ஆரம்பித்துள்ளனர். அது நல்ல லாபமான தொழிலா இருந்தாலும் அந்த சமயத்துல, இறால் குஞ்சுகளை உற்பத்தி செய்யுற நிறுவனங்கள் அதிகமா இல்லை. அதனால் குஞ்சுகளுக்குத் தட்டுப்பாடு வந்தது. 

இப்போது சென்னை, கிழக்குக் கடற்கரை சாலையில இறால் குஞ்சு பொரிக்கிற நிறுவனங்கள் நிறைய இருக்கு. அதனால, குஞ்சுகள் தாராளமா கிடைக்குது. 

இதனால் மீன் குட்டைகளை குத்தகைக்கு எடுத்து, இறால் வளர்த்து வருகின்றனர். இறால் விற்பனைக்காக பெருசா கவலைப்படத் தேவையில்ல. 

நாகப்பட்டினம், சென்னையில இருக்கற கடல் பொருள் ஏற்றுமதி மேம்பாட்டு வாரியத்துல சொல்லி வெச்சுட்டோம்னா ஏற்றுமதி செய்றவங்க தேடிவந்து வாங்கிக்கிட்டுப் போயிடுறாங்க.  உள்ளூர் மார்க்கெட்லயும் நல்ல விற்பனை இருக்கு.

நெல், கரும்பு சாகுபடிக்குத் தேவையான தண்ணியைவிட, இறால் வளர்ப்புக்குக் குறைவான தண்ணிதான் தேவைப்படும். இதுல நூறு நாள்ல லாபம் பார்த்துடலாம். 

பண்ணை மொத்தம் 10 ஏக்கர். இதுல 7 ஏக்கர் நீர்ப் பரப்பு. அதுல, 13 குட்டைகள் இருக்கு. நன்னீர், கடல்நீர் ரெண்டுலயும் வளரக்கூடிய 'லிட்டோபினஸ் வெனாமி’ங்கிற ரக இறாலைத்தான் வளர்க்கிறார்கள். 

click me!