1. சந்தைப்படுத்த வாய்ப்புள்ள மூலிகைகளை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும்.
2. மானியத்தைக் கருத்தில் கொண்டு சாகுபடி செய்யக்கூடாது.சிறந்த மூலிகைக் கம்பெனிகளுடன் ஒப்பந்த சாகுபடியை மேற்கொள்வது நல்லது.
3. இடவசதி மற்றும் நீர் வசதியைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
4. தரமான விதைகளை தேர்வு செய்வது மிகவும் முக்கியம்.
5. சாகுபடி முறை, அறுவடை முறை, பதப்படுத்தும் முறை மற்றும் செலவினங்களை மூலிகைகளை தேர்வு செய்யும் முன் அறிந்து கொள்வது அவசியமாகும்.
6. மானியம் பற்றிய விபரங்களை அருகில் உள்ள தோட்டக்கலை அலுவலகத்தை தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.