1.. நீலகிரி
undefined
இவ்வினம் தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் காணப்படுகிறது
மென்மையான ரோம உற்பத்திக்காகப் பயன்படுகிறது
நடுத்தர உடலமைப்பைக் கொண்டது
பெரும்பாலும் வெண்மை நிறத்தில் காணப்பட்டாலும், சில ஆடுகளில் உடல் மற்றும் முகம் பழுப்பு நிறத்தில் காணப்படும்
அகன்ற தொங்கும் காதுகளைக் கொண்டது
பெட்டைக்குக் கொம்பு இல்லை
வளர்ந்த கிடா மற்றும் பெட்டை ஆடுகள் 31 கி.கி எடையுடன் இருக்கும்
2.. வேம்பூர்
இவ்வினம் தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தின் வேம்பூர், மேலக்கரந்தை, கீழக்கரந்தை, நாகலாபுரம் பகுதிகளிலும் மற்றும் விருதுநகர் மாவட்டத்திலும் காணப்படுகிறது.
இறைச்சி உற்பத்திக்காக பயன்படுகிறது
இவை உயரமான ஆடுகளாகும்
வெள்ளை நிற உடலில், சிவப்பு நிறப்புள்ளிகளுடன் காணப்படும்
தொங்கும் காதுகளைக் கொண்டது
வால் குட்டையாகவும், மெலிந்தும் காணப்படும்
கிடாவுக்குக் கொம்பு உண்டு. பெட்டைக்குக் கொம்பு இல்லை
வளர்ந்த கிடா 35 கி.கி எடையுடனும் பெட்டை 28 கி.கி எடையுடனும் இருக்கும்
3.. கீழக்கரிசல்
இவ்வினம் தமிழ்நாட்டின் இராமநாதபுரம், சிவகங்கை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் காணப்படுகின்றது
இறைச்சி உற்பத்திக்காக பயன்படுகின்றது
நடுத்தர உடலமைப்பைக் கொண்டது
கருஞ்சிவப்பு நிறம் கொண்டது. தலை, வயிறு மற்றும் கால்களில் கருமைநிறம் காணப்படும்
வால் சிறியதாகவும், மெலிந்தும் காணப்படும்
கிடாவுக்கு தடித்த, முறுக்கிய கொம்புகள் உண்டு
பெரும்பாலான ஆடுகளில் கீழ்தாடையில் தாடி (வாட்டில்) காணப்படும்.
வளர்ந்த கிடா 29 கி.கி எடையுடனும், பெட்டை ஆடுகள் 22 கி.கி எடையுடனும் இருக்கும்.