உஷார்: இந்த  இரண்டு நோய்களும்கூட பயிர்களை வெகுவாத தாக்க கூடியவைதான்...

 |  First Published May 22, 2018, 11:55 AM IST
These two illnesses are also prone to poisoning the crops ...



1.. தண்டு கருகல் நோய்

நோயின் ஆரம்பத்தில் அறிகுறியானது மண்ணில் மேற்பரப்பில் தண்டுப்பகுதியில் கருமை நிற கோடுகள் தோன்றும். மேலும் நோயின் அறிகுறியானது கிளைகளை தாக்கி, தண்டுப்பகுதி முழுவதும் தண்டு கருகல் நோய் தாக்கப்பட்ட பகுதிகள் போன்று காணப்படும். 

Tap to resize

Latest Videos

undefined

இந்த அறிகுறியானது இலை காயும் வரை பரவிக் கொண்டே இருக்கும். மேலும் நோயின் அறிகுறி பூ மற்றும் காய்களிலும் காணப்படும். தாய் இலையின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு சுருங்கிய விதைகளை கொண்டிருக்கும்.

நோய் நிர்வாகம்: 

கார்பன்டாசிம் என்னும் பூசணக்கொல்லியை 2 கிராம் ஒரு கிலோ விதைக்கு என்ற அளவில் விதை நேர்த்தி செய்ய வேண்டும். தொடர்ச்சியாக ஒரு வயலில் எள் பயிரிடுவதை தவிர்க்க வேண்டும். பயிர் சுழற்சி முறையை மேற்கொள்ள வேண்டும். 

நோய் தாக்கப்பட்ட செடிகளை அகற்ற வேண்டும். மெட்டாலாக்சில் 2 கிராம் ஒரு லிட்டர் அல்லது அலியேட் 1 கிராம் ஒரு லிட்டர் அல்லது மான்டிபிரோபொமீட் ஒரு கிராம் ஒரு லிட்டர் என்ற அளவில் தெளிக்க வேண்டும்.

2.. இலைப்புள்ளி நோய்

இந்நோயானது செர்க்கோஸ்போரா சிசாமி என்ற பூசணத்தால் ஏற்படுகிறது. இந்நோய் குறிப்பாக பயிரிட்ட 30 முதல் 45 நாட்களில் இலைகளை தாக்குகிறது.

இந்நோயின் அறிகுறியானது முதலில் சிறிய புள்ளிகளாக ஆரம்பித்து ஒழுங்கற்ற வடிவத்துடனோ அல்லது வட்ட வடிவத்துடனோ புள்ளிகளாக தோன்றும்.

இலைகளில் சிறிய பழுப்பு நிற 3 மில்லி மீட்டர் விட்டமுடைய புள்ளிகள் சாம்பல் நிறத்தில் நடுவிலும், சுற்றி மஞ்சள் நிற வளையமும் காணப்படும். பின் புள்ளிகள் ஒன்றோடொன்று இணைந்து இலைகள் முழுவதும் பரவி நோயின் தாக்கம் அதிகமாகி இலைகள் காய்ந்து உதிர்ந்து விடும்.

நோய் நிர்வாகம்: 

நோய் தாக்கப்படாத தரமான விதைகளை பயன்படுத்த வேண்டும். நோய் எதிர்ப்பு திறனுள்ள ரகங்களான ‘டி.கே.ஜி.-21’ பயிரிடலாம்.

நோய் தாக்கப்பட்ட செடிகளின் பகுதிகளை நிலத்தில் தங்கவிடாமல் எரித்து விட வேண்டும். உயிரியல் நோய்க் கொல்லியான டிரைக்கோடெர்மா விரிடி ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் என்ற அளவில் விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

பயிரில் நோய் ஆரம்பித்தவுடன் மான்கோசெப் 2 கிராம் ஒரு லிட்டர் அல்லது மைகோபூட்டனில் 1 கிராம் ஒரு லிட்டர் அல்லது அசாக்சிஸ்ட்ரோபின் ஒரு கிராம் ஒரு லிட்டர் என்ற அளவில் நீரில் கலந்து தெளிக்கலாம். நோயின் தீவிரத்தை பொறுத்து 15 நாட்கள் இடைவெளியில் மீண்டும் தெளிக்க வேண்டும்.

click me!