நாவல் மரம் உள்ள பகுதிகளில் கண்டிப்பாக நீர் இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார் பெரும்பாலும் நாவல் மரம் இருக்கும் பகுதிகளில் மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் சுவையான நிலத்தடிநீர் இருக்கும்.
ஏனென்றால் இந்த மரத்தின் வேர் பகுதிகள் மழைகாலங்களில் பெய்யும் தண்ணீரை தனக்குள் ஈர்த்து வைத்துக்கொள்ளும் ஆற்றல் கொண்டது என்று தற்போது அறிவியல் அறிஞர்கள் ஆய்வு செய்து நிரூபித்துள்ளனர்.
பிரபலமான அறிவியல் பிரமுகர்களான வராகமித்திரர் தன்னுடைய "பிரிஹட் சம்ஹிதா" என்ற நிலத்தடி நீர் எங்கு உள்ளது என்பதை கண்டறிவது பற்றி விரிவாக கூறி உள்ளார். இவர் தன்னுடைய அத்தியாய வசனத்தில் பூமிக்கு அடியில் உள்ள நீரினை எளிதாக கண்டுபிடிக்கும் முறையினை குறிப்பிட்டுள்ளார்.
அவையாவன:-
மரங்கள்
எறும்பு – மலைகள் (புற்றுகள்)
பாறைகள்
பாறை நிறம் மற்றும் மண் இயல்பு
வராகமித்திரர் தன்னுடைய புத்தகத்தில் பூமிக்கு அடியில் உள்ள தண்ணீரை பல்வேறு திசைகள் கொண்டு சுட்டிக் காட்டியுள்ளார். அத்திசைகளுக்கு பழங்காலத்தில் கடவுளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளதை தெரிவித்துள்ளார்.
புற்றுகள் உள்ள பகுதிகள் மற்றும் வெள்ளை நிற தவளை (தேரை) இருக்கும் இடங்களிலும், வெள்ளை நிற பூக்கள் கொண்ட காட்டு மரங்கள் வளரும் பகுதிகளிலும் கண்டிப்பாக நிலத்தடிநீர் இருக்கும்.
அதுமட்டுமல்லாது அத்திமரம், கடம்ப மரம், நொச்சி மரம், அர்ச்சுனா மரம், பிலுமரம், புளியமரம், மருத மரம், வேம்பு மரம், வில்வம் போன்ற மரங்கள் இருக்கும் பகுதிகளில் கண்டிப்பாக தண்ணீர் இருக்கும்.