மல்லிகை சாகுபடி தொழில் நுட்பங்கள்…
இரகங்கள்:
மல்லிகை பூவில் ஒற்றை மோக்ரா, இரட்டை மோக்ரா, குண்டுமல்லி, ராமநாதபுரம் போன்ற ரகங்கள் ஏற்றதாகும்.
பருவம்:
ஜூன் முதல் நவம்பர் வரை மல்லிகை நடவு செய்யலாம்.
நடவு:
30 செ.மீ.க்கு 30 செ.மீ.க்கு 30 செ.மீ.என்ற அளவில் குழி எடுக்க வேண்டும். 1.25 மீட்டர் இருபுறமும் இடைவெளி விட்டு எக்டேருக்கு 6 ஆயிரத்து 400 பதியன்கள் அல்லது வேர் விட்ட குச்சிகள் நடவு செய்ய வேண்டும்.செடிக்கு சாண உரம் 10 கிலோவும், தழை, மணி சாம்பல் சத்து 60:120:120 கிராம் என்ற விகிதத்தால் கவாத்து செய்த பின் ஜூன், ஜூலை மாதத்தில் இட வேண்டும்.
நவம்பர் இறுதி வாரத்தில் தரை மட்டத்திலிருந்து 50 செ.மீ.உயரத்தில் செடிகளை கவாத்து செய்ய வேண்டும்.
பூச்சித் தாக்குதல்:
மொட்டு புழு தாக்குதலை கட்டுப்படுத்த மனோகுரோட்டோபாஸ் ஒரு லிட்டர் தண்ணீரில் 2 மில்லி என்ற அளவில் தெளிக்க வேண்டும்.
சிவப்பு முரணை நோயை கட்டுப்படுத்த டைகோபால் 2.5 மில்லி ஒரு லிட்டர் தண்ணீர் என்ற அளவில் தெளிக்க வேண்டும்.
நூர்புழுவை கட்டுப்படுத்த டெமிக் குருணைகள் 10 கிராம் செடிக்கு அளவில் வேர் பகுதியை சுற்றி இடவேண்டும்.
நோய்த் தாக்குதல்
நேர் அழுகல் நோயை கட்டுப்படுத்த காப்பர் ஆக்ஸிகுளோரைடு 2.5 கிராம் ஒரு லிட்டர் நீரில் கலந்து செடியை சுற்றி மண்ணில் ஊற்ற வேண்டும்.
சத்து பற்றாக்குறை
இரும்பு பற்றாக்குறை இருந்தால் இலைகளின் ஓரங்கள் வெளுத்தும், மஞ்சளாகவும் காணப்படும். இரும்பு சல்பேட் 5 கிராம் ஒரு லிட்டர் நீருக்கு ஒட்டும் திரவத்துடன் கலந்து தெளிக்க வேண்டும்.
அறுவடை
மலர்கள் மார்ச், ஏப்ரல் மாதங்களில் கிடைக்கும். எக்டேருக்கு 8 ஆயிரத்து 750 கிலோ மலர்கள் கிடைக்கும்.