மஞ்சள் பயிரின் பாதுகாப்பிற்கு ஆமணக்கு செடிகளை ஊடுபயிராக பயிரிடலாம். மஞ்சள் பயிரைப் பாதுகாக்க நோய் தாக்குதலை முன்கூட்டியே அறிவிக்கும் தன்மை கொண்ட ஆமணக்கு செடிகளை நிலத்தை சுற்றிலும் ஊடு பயிராக வளர்க்கலாம்.
பத்து மாத பயிரான மஞ்சள் செடிகளை விதைத்த மூன்றாவது மாதம் முதல் ஆமணக்கு செடிகளை நிலத்தை சுற்றிலும் நடுகின்றனர். இதன் மூலம் மஞ்சள் பயிரைத் தாக்கும் படைப்புழுவின் தொற்று முதலிலேயே ஆமணக்கு செடிகளின் இலைகள் மூலம் விவசாயிகள் தெரிந்து கொள்ளலாம்.
undefined
பூச்சி மருந்து தெளித்து இரு பயிர்களையும் விவசாயிகள் பாதுகாக்கலாம். ாறு மாத பயிரான ஆமணக்கு செடிகள் மூலம் விளக்கெண்ணெய் தயாரிக்க உதவும் ஆமணக்கு கிடைக்கிறது.
ஊடுபயிராக ஒரு ஏக்கர் அளவில் நடப்படும் ஆமணக்கு செடிகள் மூலம் 200 கிலோ ஆமணக்கு கிடைக்கும். இதனால் கள்ளக்குறிச்சி பகுதி விவசாயிகள் மஞ்சள் பயிருடன் ஊடுபயிராக ஆமணக்கு பயிரிடலாம்.