நெற்பயிரில் அதிக மகசூல் பெற வளர்ச்சி ஊக்கிகள்
ஏக்கருக்கான அளவு அமுதக் கரைசல் 50 – 80 லிட்டர் ஆவூட்டம் 5 – 10 லிட்டர் தேமோர்க் கரைசல் 5 – 10 லிட்டர் அரப்புமோர் கரைசல் 5 – 10 லிட்டர் மீன் அமினோ அமிலம் 3 லிட்டர் நெல் நடவு செய்த 20 முதல் 25ஆம் நாளில் இருந்து 7 முதல் 10 நாள் இடைவெளியில் 2 முதல் 4 முறை இக்கரைசல்களைப் பயன்படுத்தலாம்.
undefined
ஒட்டுண்ணிகள் பூச்சிகளைக் கட்டுப்படுத்த
மூலிகைப் பூச்சி விரட்டிகள் பயன்படுத்துதோடு மட்டுமல்லாமல் ஒட்டுண்ணிகளையும் பயன்படுத்த வேண்டும். இலைச்சுருட்டுப் புழுக்களைக் கட்டுப்படுத்த ‘ஜப்பானிகம்’ என்ற ஒட்டுண்ணியை ஏக்கருக்கு 2சிசி என்ற அளவில் பயன்படுத்த வேண்டும்.
‘பிரக்கானிட்’ என்ற குளவியை ஏக்கருக்கு 5 பாக்கெட் என்ற அளவில் பயன்படுத்த வேண்டும். இலைச்சுருட்டுப் புழுத் தாக்குதல் மிக அதிகமாக இருப்பின் மூலிகைப் பூச்சிவிரட்டியுடன் ஏக்கர் ஒன்றுக்கு ஒரு கிலோ பவேரியா ப்ராங்கியார்ட்டி அல்லது பவேரியா பாஸ்ஸியானா கலந்து தெளிக்கலாம்.
எப்பொழுதும் ஒரு வளர்ச்சி ஊக்கி-ஒரு பூச்சிவிரட்டிச் கரைசல்-சூடோமோனஸ் என்று மாற்றி மாற்றி நெல்லுக்கு உணவைக் கொடுத்துவர வேண்டும்