மண் வள மேம்பாடு என்பது விவசாயத்தில் மிக முக்கிய முதலீடு என்பது மறுக்க முடியாது. ஏனென்றால் விவசாயத்திற்கு ஆகும் செலவில் 40 சதவிதம், வேளாண் இடுபொருட்களுக்கு ஆகிறது.
பொதுவாக நாம் உரங்களை இடுவதில் அறிவியல் பூர்வமான நடைமுறைகளை பின்பற்றுவதில்லை.
undefined
தழை சத்து, மணி சத்து மற்றும் சாம்பல் சத்துக்களை உண்மையிலேயே தேவையான அளவு மட்டும் அளிப்பதில்லை. இதன் விளைவாக இடு பொருட்களின் செலவு அதிகரிப்பதுடன், அந்த செலவுக்கு ஏற்றால் போல் லாபம் கிடைப்பதில்லை.
நாம் மேற்சொன்ன மூன்று சத்துக்களை பற்றி மட்டும் நினைக்கிறோம். ஆனால் பயிருக்கு தேவையான முக்கிய சத்துக்கள் 12 உள்ளன.
அவை என்னென்ன சத்துக்கள்
முதன்மை சத்துக்கள்
தழை சத்து (Nitrogen), மணி சத்து (Phosporus), சாம்பல் சத்து (potassium)
சிறிது முக்கியமான சத்துக்கள்
கால்சியம் (Calcium), மெக்னீசியம் (magnisium), சல்பர் (sulfur)
குறைவான அளவு தேவைபடுபவை
இரும்பு சத்து (Fe), மாங்கனீசு (Mn), துத்தநாகம் (Zn), போரான் (B), காப்பர் (Cu).