பயிர் உற்பத்தியின் செலவில் 40% செலவு பயிருக்கு தேவையான சத்துக்களை வழங்க செலவாகிறது. எனவே தேவையான சத்துக்களை மட்டும் தேவையான அளவு, தேவையான நேரத்தில் வழங்குவது மிகவும் அவசியமானது ஆகும்.
எந்த ஒரு சத்தும் குறைவாகவோ அல்லது அதிகமாகவோ இருந்தால் பயிர் பற்றாக்குறை அல்லது மிதமிஞ்சிய நச்சுதன்மைக்கான வெளியீட்டு குறியை காட்டும்.அது மட்டுமின்றி பயிர் வெளியிடும் குறியானது கண்டு பிடிக்க மிகவும் கடுமையானதாக இருக்கும்.இந்த பயிரின் குறியானது பூச்சி அல்லது நோய் தாக்குதலால் ஏற்படும் குறி போலவே இருக்கும்.
undefined
பெரும்பாலான சத்துக்களின் குறைவு ஒரே குறியாக பயிரின் பச்சை தன்மை வெளிரியிருப்பதாகவே காட்டும். எனவே நாம் மண்ணில் உள்ள சத்துக்களின் அளவை பற்றி அறிந்து இருப்பது அவசியமாகிறது.
இல்லாவிட்டால் நம்முடைய மண்ணின் சத்தை பற்றிய கணிப்பு தவறாக போய் தேவையற்ற உரங்களை தேவையற்ற அளவு அளித்து பணம் வீணாவதுடன், பயிரின் உற்பத்தியும் குறைய வாய்ப்புள்ளது
எனவே, மண்ணில் உள்ள சத்துக்களை ஒட்டு மொத்தமாக பரிசோதனை செய்து அறிந்து கொள்வது அவசியமாகிறது.