1.. சோளத்தை தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்தும் முதல் முறை "கைவினை முறை"
முட்டைப் புழு, கூட்டுப் புழுக்கள் பாதிக்கப்பட்ட பயிரின் பகுதிகளையும் சேகரித்து அழிப்பதால், பூச்சி நோய் தாக்குதல் அதிகரிக்காது தடுக்கப்படுகின்றன.
கருவாட்டுப் பொறி ஏக்கருக்கு 5 என்ற அளவில் வைப்பதால் குருத்து ஈக்கள் கவரப்பட்டு, அழிக்கப்படுகின்றன. ஒரு மாத காலம் இந்தப் பொறியை வைக்க வேண்டும். வாரம் ஒருமுறை நனைத்த கருவாட்டை வைத்திட வேண்டும்.
விளக்குப் பொறி வைப்பதால், தண்டுப்புழுவின் தாய்ப் பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம். ஏக்கருக்கு 5 என்ற அளவில் இனக் கவர்ச்சி பொறிகள் வைத்து, கதிர் பருவத்தில் தாக்கிடும் பச்சைப் புழுவின் (ஹெலிகோவெர்பா) ஆண் அந்துப்பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம்.
2.. சோளத்தை தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்தும் இரண்டாவது முறை "ரசாயன பூச்சிக் கொல்லிகள்"
குருத்து ஈ
ஒரு செடிக்கு ஒரு முட்டை அல்லது 10 சதவீதம் நடுக்குருத்து காய்ந்து காணப்பட்டால் மீதைல் டெமட்டான் 200 மிலி அல்லது ரோகார் 200 மிலி இவற்றில் ஒன்றை தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.
குருத்துப் பூச்சி
10 சதவீதம் நடுக்குருத்து காய்ந்து காணப்பட்டால், குயினால்பாஸ் குருணை மருந்து ஏக்கருக்கு 6 கிலோ அல்லது போரேட் குருணை மருந்தை 3 கிலோ அல்லது பியூடான் குருணை மருந்து 7 கிலோ. இவற்றில் ஏதேனும் ஒன்றை 20 கிலோ மண்ணுடன் கலந்து, நடுக்குருத்தில் இட்டுக் கட்டுப்படுத்தலாம்.
கதிர் ஈ
கதிருக்கு 5 எண்ணமும், கதிர்நாவாய்ப் பூச்சி கதிருக்கு 10 எண்ணமும், கதிர்புழு கதிருக்கு 5 எண்ணமும் இருந்தால் ஏக்கருக்கு கார்பரில் அல்லது மாலத்தியான் அல்லது பாசலோன் தூசு மருந்துகளில் ஏதேனும் ஒன்றை 10 கிலோ என்ற அளவில் கதிர்களில் தூவிக் கட்டுப்படுத்தலாம்.