** சாதனத்தில் வாயு இருந்தும் அடுப்புக்கு வராதிருத்தல்:வாயுக் குழாய் அடைத்தாலும், தேவையான அழுத்தம் இல்லாததாலும், வாயு வெளிவரும் வழியில் ஆடை அடைத்தாலும் வாயு வராது. இதை சரி செய்ய குழாயில் உள்ள தண்ணீரை அகற்ற வேண்டும். வாயுக் கொள்கலத்தின் மேல் சுமையை அதிகரிக்கவேண்டும். வெளிச் செல்லும் வால்வை திறந்து தண்ணீர் அழுத்தத்தால் சரி செய்யவேண்டும்
** வாயு எரியாமல் இருத்தல்:
முதலில் வரும் வாயுவில் கரியமிலவாயு கலந்து இருக்கும். அதனால் வாயு எரிய வாய்ப்பிருக்காது. சாணக் கரைசலை சரியாகக் கலந்து ஊற்றாவிட்டாலும் வாயு வராது. இதற்கு சரியான விகிதத்தில் தூசி மற்றும் குப்பை கூளங்கள் இல்லாத சாணத்தை கரைத்து ஊற்ற வேண்டும்.
** அடுப்பிற்கு மேல் அதிக உயரத்தில் சுவாலை எரிதல்: வாயு அழுத்தம் அதிகம் இருந்தாலும் அல்லது அடுப்பில் வாயு வரும் குழாயில் கரி பிடித்திருந்தாலும் அடுப்பிற்கு மேல் அதிக உயரத்தில் சுவாலை எரியும். வாயு வெளிவிடும் வால்வை சரிசெய்து அடுப்பை சுத்தம் செய்தால் இக்குறை நீங்கும்.
** சுவாலை இறங்கி அணைதல்:
தேவையான அழுத்தம் இல்லாமல் இருந்தால் சுவாலை இறங்கவும், அணையவும் வாய்ப்பு உண்டு. சில சமயங்களில் வாயுவின் அளவு குறைவாக இருந்தால் இவ்வாறு ஏற்படும். இதற்கு வாயுவின் அளவை சரிபார்க்க வேண்டும்.
** வாயு கொள்கலத்தையும் குழாயையும் அரித்தல்:
பராமரிப்பு சரியில்லாமல் இருந்தால் இவ்வாறு ஏற்படும். துருப்பிடித்த பகுதிகளை நீக்கி பெயிண்ட் அடித்தால் குறை நிவர்த்தியாகி விடும்.
** சாணக் கரைசல்கள் உள் செல்லும்,வெளிச் செல்லும் குழாயை பரீசிலனை செய்தல் (இரும்பு வாயுக் கொள்கலம் உள்ள சாதனம்) : சுத்தமான கரைசல் ஊற்றாவிட்டால் குழாயில் அடைப்பு ஏற்படும். கால் நடைகளின் சாணக்கரைசல் மட்டும் ஊற்றுதல் மற்றும் குழாயை சுத்தமாக செய்தால் இக்குறை நீங்கும்.
** சாதனத்தை சுற்றிலும் சுத்தமில்லாதிருத்தல் வெளி வந்த சாணக் கரைசல் அப்புறப்படுத்தாமல் இருந்தால் இவ்வாறு ஏற்படும். இதற்கு மத்திய உரக் கலவைக்கு சாணக் கரைசலைக் செலுத்தி உபயோகிக்க வேண்டும்.