மாமரத்தில் அதிகம் காய்களை பெற இந்த வழியை பயன்படுத்துங்க…

 
Published : Feb 18, 2017, 01:09 PM ISTUpdated : Sep 19, 2018, 01:35 AM IST
மாமரத்தில் அதிகம் காய்களை பெற இந்த வழியை பயன்படுத்துங்க…

சுருக்கம்

கடந்தாண்டின் மழையளவு, கவாத்து செய்தல், தண்டின் வளர்ச்சி, இலைகளின் பயிர் வினையியல் மாறுபாடு, வளர்ச்சி ஊக்கி அளவு, தட்பவெப்ப நிலையைப் பொறுத்து டிசம்பர் முதல் பிப்ரவரி வரை மா மரங்கள் பூக்கும் நிலை மாறும்.

இந்தாண்டு மழை போதுமான பெய்துள்ளதால் மாவிலைகளில் அதிக ஈரப்பதம் இருப்பதால் பூக்கும் காலம் சரியாக இருக்கும்.

பொட்டாசியம் நைட்ரேட் ரசாயன உப்பை மாமரங்களில் தெளிக்கலாம்.

ஒரு கிலோ பொட்டாசியம் நைட்ரேட், அரைகிலோ யூரியா எடுத்து 50 லிட்டர் தண்ணீரில் கலக்க வேண்டும்.

அதனுடன் 50 லிட்டர் தண்ணீர், 100 மில்லி ஒட்டும் திரவத்தை சேர்க்க வேண்டும். அதிக உப்புத் தன்மையுள்ள நீரை பயன்படுத்தக்கூடாது.

இலை, தளிர், மொட்டுக்கள் நன்கு நனையுமாறு மாலை வேளையில் 15 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை தெளிக்க வேண்டும்.

அவ்வாறு தெளித்தால் ஐந்து வாரங்கள் கழித்து மாமரத்தில் அதிகம் காய்கள் பூக்க ஆரம்பிக்கும்.

PREV
click me!

Recommended Stories

Agriculture: விவசாயிகளுக்கு செம சான்ஸ்! அரசு நடத்தும் வேளாண் கண்காட்சியில் பங்கேற்க அழைப்பு.! விற்கலாம், வாங்கலாம்!
Free Training: அப்பாடா! விவசாயிகளுக்கு இனி லட்சக்கணக்கில் வருமானம் கிடைக்கும்! காய்கறி பதப்படுத்தும் பயிற்சி.! எங்க நடக்குது தெரியுமா?