கரும்பு பயிர் விளைச்சலுக்கான நீர் மேலாண்மை இதோ..

 |  First Published Mar 22, 2017, 12:52 PM IST
The sugar cane crop yields water management Here



கரும்பு:

கரும்பிற்கு மொத்தமாக 1800 மி.மீ. நீர் தேவைப்படுகிறது.

Latest Videos

undefined

வளர்ச்சிப் பருவத்திற்கு ஏற்றபடி நீர் பாய்ச்சலாம்.

முளைப்புப்பருவம் ஐந்து நாட்கள், வளர்ச்சிப்பருவம் 7 முதல் 8 நாட்கள், முதிர்ச்சிப் பருவம் 10-11 நாட்கள், இடைவெளியில் நீர் பாய்ச்சுவதால் அதிக விளைச்சல் கிடைக்கும். அத்துடன் 30 சதவீதம் வரை நீர் சேமிக்க வாய்ப்பு உண்டு. குறைந்த அளவு நீர் கொண்டு அடிக்கடி நீர் பாய்ச்சுவதால் முளைப்புத்திறன் அதிகரிக்கும்.

ஆலைக்கழிவான “பிரஸ்மட்’ அல்லது மக்கிய தென்னை நார்க்கழிவு எக்டருக்கு 15 டன்கள் இடுவதால் மண்ணின் நீர்பிடிப்பு தன்மை அதிகரித்து வறட்சி காலத்தில் பயிரைக் காக்கலாம்.

அகலப்பார் இடைவெளியில் சொட்டு நீர்ப்பாசன முறையில் பாசனம் செய்வதால் அதிக விளைச்சலுடன் நீர் சேமிப்பும் அடையலாம். .

கரும்பில் ஊடுபயிராக உளுந்து, சோயா மொச்சையைப் பயிரிட்டு அதிகப்படியான வருமானம் பெறுவதுடன் நீர் உபயோகிக்கும் திறனையும் அதிகரிக்கலாம்.

பின்பட்ட பருவத்தில் நடவு செய்த கரும்பு பெரும்பாலும் வறட்சியினால் பாதிக்கப்படுகிறது. இதன் பாதிப்பு தூர் பிடிக்கும் பருவத்தில் 11 விழுக்காடு என்றும், வளர்ச்சிப் பருவத்தில் 20 விழுக்காடு இருக்கும்.

இந்த விளைச்சல் இழப்பைச் சரிகட்ட 1 சதம் பொட்டாஷ் கரைசலை 30, 60, 90-வது நாட்களில் சரிபாதி யூரியாவுடன் கலந்து கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும்.

சொட்டுநீர் வடிவமைப்பு முறையில் 1.5 மீட்டர் இடைவெளியில் பக்கவாட்டு குழாய்கள் அமைத்தால் வடிவமைப்பினை மாற்றாமலேயே கரும்பு, வாழை, மஞ்சள், மரவள்ளி, தக்காளி பயிர் செய்யலாம்.

 

click me!