வீட்டில் வளர்க்கப்படும் செடிகளை பாதுகாக்க வேப்ப மரத்தை இப்படி பயன்படுத்தலாம்...

First Published Apr 30, 2018, 1:35 PM IST
Highlights
The neem tree can be used to protect the home grown plants



வீட்டில் வளர்க்கப்படும் செடிகளை பாதுகாக்கும் வேப்ப மரம்

** இயற்கை பூச்சிக் கொல்லியான வேப்ப எண்ணையை மாதம் ஒரு முறை அனைத்து வகைச் செடிகளிலும் தெளிக்க வேண்டும்.

** வேப்ப இலைகளைச் சேமித்து நன்கு காய வைத்துத் தூள் செய்துகொள்ள வேண்டும். 

** இந்தத் தூளைச் செடி ஒன்றுக்கு ஒரு பிடி வீதம் செடியின் வேர் பகுதியில் போட்டு நன்கு கொத்திவிட வேண்டும். 

** இதுவே அடி உரமாகவும் பூச்சிக் கொல்லியாகவும் செயல்படும்.

** வளர்ந்த ஒரு வயது செடிகளுக்கு மூன்று மாதத்திற்கு ஒரு முறை இயற்கை உரம் ஒரு பிடி போட வேண்டும்.

** இரண்டு வயது செடிகளுக்கு இரண்டு மடங்கு உரம் தேவை.

** இதே போலத்தான் தொட்டிச் செடிகளுக்கும் உரமிட்டுப் பராமரிக்க வேண்டும். இதனால் செடிகளின் வளர்ச்சி சீராக இருக்கும்.

** வீட்டுக்குள் (இண்டோர் பிளாண்ட்) வளர்க்கப்படும் செடிகளுக்குக் குறைவாகவே தண்ணீர் விட வேண்டும். இச்செடிகளுக்குத் தண்ணீரை ஸ்பிரே செய்தால்கூடப் போதும். 

** அதுகூட அச்செடிகளின் இலைகளில் உள்ளத் தூசியை நீக்குவதற்காகத்தான். வாரம் ஒரு முறை மிதமான சூரிய ஒளிபடுமாறு பால்கனியிலேயோ, வீட்டின் வெளியிலேயோ வைக்கலாம். 

** இதற்கு முன் செடியின் அடி மண்ணைக் கிளறிக் கொத்தி விடவேண்டும். இதுவே தண்டுச் செடிகளாக இருந்தால், தண்டின் அடி பாகத்தில் மட்டுமே தண்ணீர் விட வேண்டும்.

** இவற்றைப் பூச்சிகள் தாக்காமல் இருக்க வேப்ப எண்ணையை ஸ்பிரே செய்ய வேண்டும். 

** மணி பிளாண்ட், வெற்றிலை, மிளகு, ஐபோமி, பிலோடாண்டிரன்ட் கோல்டு, பிலோடாண்டிரன்ட் செலம், கிரே ஐவி ஆகிய செடிகள் வீட்டிற்குள் வளரக் கூடியவை.

** இந்த வழிமுறைகளால் வீட்டுத் தோட்டச் செடிகளும், வீட்டுக்குள் வளர்க்கப்படும் செடிகளும் எப்போதும் பொலிவாக இருக்கும்.

 

click me!