செயற்கை உரங்களை பயன்படுத்தி தக்காளி சாகுபடி செய்வதைக் காட்டிலும், இயற்கை வழி வேளாண் முறையில் தக்காளி சாகுபடி செய்வதன் மூலம் அதிக மகசூல் பெற்று லாபம் பெறலாம்.
தக்காளி நடவு செய்து வரும் விவசாயிகள் அசோஸ்பைரில்லம் என்ற நுண்ணுயிரியை தெளிக்க வேண்டும். ஏன்? தெரியுமா?
undefined
தக்காளி நாற்று நடவு செய்வதற்கு முன்பு, பாத்திகளில் உள்ள தக்காளி நாற்றுகளை எடுத்து, ஒரு ஏக்கருக்கு ஒரு கிலோ அசோஸ்பைரில்லம், ஒரு கிலோ பாஸ்போ பேக்டீரியாவை 10 லிட்டர் தண்ணீரில் கரைத்த கரைசலில், வேர்பகுதியை நனைத்து, பின்பு நடவு செய்யவேண்டும்.
அப்போது தக்காளிச்செடிக்கு தேவையான தளைச்சத்து மற்றும் மணிச்சத்துக்கள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. இதனால் தக்காளிச் செடிக்கு அடிக்க வேண்டிய உரங்களில் இருந்து 20 சதவீதம் உரச் செலவுகளை குறைக்கலாம்.
சரியான ஈரப்பதத்தில் வயலை 3 அல்லது 4 முறை உழவு செய்யவேண்டும். 10 நாள் சிதைவு ஏற்படுவதற்காக விட வேண்டும்.
பசுந்தாழ் உரமாக சணப்பை விதைத்து 35 நாட்களுக்குப் பின் மடக்கி உழ வேண்டும். கடைசி உழவுக்கு முன் ஹெக்டேருக்கு 25 டன் வீதம் தொழு உரம் அல்லது கம்போஸ்ட் இடலாம்.
நடவுக்கு முன் 20 கிலோ தொழு உரத்துடன் அசோஸ் பைரில்லம் 2 கிலோ (1 ஹெக்டேருக்கு) பாஸ்போ பாக்டீரியா 2 கிலோ ஆகியவற்றை கலந்து இட வேண்டும்.
60 செ.மீட்டர் இடைவெளியில் பார்கள், உழவு சால்கள் அமைக்க வேண்டும். ஒரு ஹெக்டேருக்கு 12 எண்ணிக்கை என்ற அளவில் இனக் கவர்ச்சி பெரோமோன்களை அமைக்க வேண்டும்.
பேசில்லஸ், துரின்ஷியன்சிஸ் 2 கிலோ என்ற அளவில் தெளிக்கவும். தாக்கப்பட்ட பழங்களை அப்புறப்படுத்தி அழிக்கவேண்டும்.
வேப்பெண்ணெய் 3 சதவீதம், வேப்ப விதை பருப்புச் சாறு 5 சதவீதம் என்ற அளவில் தெளித்து பூச்சி பரவுதலைத் தடுக்க வேண்டும்.
புள்ளியிட்ட அழுகல் வைரஸ் தடுக்க 10 சதவீத சோள இலைச்சாறு, அல்லது ப்ரோசோபிஸ் அல்லது தேங்காய்ச் சாறு 15 நாள் இடைவெளியில் தெளிப்பதன் மூலம் வைரஸ் தாக்குதலில் இருந்து பாதுகாக்க முடியும்.
இவ்வாறு செய்யம்போது, தக்காளிச் செடியின் காய்ப்புத்திறன் அதிகரிக்கிறது. இந்த நுண்ணுயிரிகள் வேளாண்மை விரிவாக்க மையத்தில் கிடைக்கிறது