* தேவையான அளவு பசும்புல் தரவேண்டும்.
* வைக்கோலை பசுந்தீவனத்துடன் சேர்த்து தரலாம்.
* அதிகமாக உள்ள பாலைக் கறந்து பசுவிற்கே ஊட்டலாம்.
* ஒரு பங்கு வெல்லம் மற்றும் 3 பங்கு பார்லி கலந்து நன்கு பக்குவம் செய்து தரலாம்.
* பப்பாளிப்பழம் மற்றும் பப்பாளி இலையை வெல்லம் சேர்த்து தரவேண்டும்.
* இலுப்பைப்பூ, புல், வெல்லம் ஆகியவற்றை தண்ணீரில் நனைத்துத் தரலாம்.
* கரும்புத்துண்டு, கருப்பஞ் சக்கையைத் தரலாம்.
* முட்டைக்கோஸ் கீரையைக் கொடுக்கலாம்.
* வில்வப் பழத்தை வேகவைத்துக் கொடுக்கலாம்.
* புரசு இலையையும் இலுப்பைப் பூவையும் தரலாம்.
* சுரைக்காய் மற்றும் இலை தருவதால் பால் பெருகும்.
* வெல்லத்தையும் கடுகையும் சேர்த்து தரலாம்.
* நன்றாக வேகவைக்கப்பட்ட மூங்கில் இலையுடன் உப்பு மற்றும் ஓமம் சேர்த்துத் தரலாம்.
* பால்பெருக்கி இலை தண்ணீர் விட்டான்கிழங்கு, அஸ்வகந்தா பால் பெருக்க உதவும்.
* ஜீரகம்-200 மி.கி., உப்பு -200 மி.கி., சோம்பு-200 மி.கி., லவங்கம்-80 மி.கி., வெண் கந்தகம்-40 மி.கி., படிகாரம்-40 மி.கி., பொட்டாசியம் நைட்ரேட்-40 மி.கி., என்ற விகிதத்தில் கலந்து வைத்துக் கொண்டு காலை, மாலை ஆகிய இருவேளைகளிலும் தீவனத்துடன் ஒரு கைப்பிடி அளவைச் சேர்த்துக் கொடுப்பது பால் பெருக்கச் செய்யும்.
* கன்று ஈன்ற பசுவிற்கு ஈன்ற மூன்றாம் நாளில் உளுந்துக் குருணை 500கி, உப்பு-100கி, மஞ்சள்-50கி, திப்பிலி பொடி-50 கி ஆகியவற்றை தண்ணீரில் கொதிக்கவைத்து அதில் கால் பங்கு வெல்லம் சேர்த்து இளம் சூட்டில் மாலை நேரத்தில் தருவதால் பால் நன்றாகப் பெருகும்.
* சினை மாடுகளுக்கு கன்று ஈன்றபிறகு பால் சுரக்காமல் மடி இறுகிப் போயிருக்கும். இதனால் கன்றுக்குத் தேவையான பால் கிடைக்காது. பசுவின் மடிக்காம்புகளை ஆமணக்கு இலையைச் சூடாக்கி ஒத்தடம் கொடுத்தால் மடி இளகும்.