1.. ஆடுகளுக்கான இனச்சேர்க்கை காலம்
ஆடுகள் பொதுவாக சூட்டிற்கு வரும் போது அவைகளிடம் கீழ்க்காணும் அறிகுறிகள் தென்படும். வாலை அடிக்கடி ஆட்டுதல், பாலுறுப்புகள் சிவந்து காணப்படுதல், சிறிது மியூகஸ் திரவம் வழிதல், ஆடு அமைதியின்றிக் காணப்படுதல், அடிக்கடி சிறுநீர் கழித்தல், அலறுதல்.
சூட்டில் இருக்கும் காலம் 18-21 வரை நாட்கள் வேறுபடும். பெட்டை ஆடு சூட்டிற்கு வந்த இரண்டாவது நாளில் இனச்சேர்க்கை செய்தல் நலம். ஏனெனில் சூட்டிற்கு வந்தபின் 22-48 மணி நேரம் வரை தான் அணுக்கள் உயிருடன் இருக்கும்.
நல்ல தீவனம் அளித்து முறையாகப் பராமரித்தால் இறப்பு விகிதம் குறைந்து, சினைப்பிடித்தல் அதிகரிக்கும்.
இனச்சேர்க்கை அல்லது கருவூட்டல் நேரமானது தட்பவெப்பநிலை, இடம், இனம் போன்ற காரணிகளைப் பொறுத்து மாறுபடும்.
2.. பெட்டை ஆடுகள் கருவூட்டம்
பெட்டை ஆடுகள் 1 வயதிலிருந்தே கருவூட்டலுக்குத் தயாராகிவிடும். பொதுவாக 10-15 மாதத்தில் கருவூட்டல் செய்தால் 15-20 வது மாதத்தில் முதல் குட்டி ஈனும் சினைக்காலம் 151+3 நாட்கள் வருடத்திற்கு ஒரு முறை கருவூட்டல் செய்தல் நலம்.
சில இனங்கள் 2 வருடத்திற்கு 3 முறை அதாவது 18 மாதங்களுக்கொரு முறை குட்டி ஈனும் 5-7 வருடங்களில் அதிகக் குட்டிகள் ஈனும். சில இனங்கள் 12 வயது வரை கூட நிறையக்குட்டிகள் ஈனும் திறன் பெற்றுள்ளன.
நன்கு பராமரிக்கப்பட்ட ஆடானது அடுத்த குட்டி ஈனுவதற்கு முந்தைய மாதம் வரை பால் கறக்கக்கூடியதாக இருக்கும்.
சினை ஆட்டை சரியான தீவனமளித்து, நன்கு பாதுகாக்கவேண்டும். மழை, வெயிலிருந்தும் ஒட்டுண்ணிகளிடமிருந்தும் முறையாகப் பராமரித்தால் சிறப்பான கன்றுகளைப் பெற முடியும்.