கோழிப்பண்ணை அமைக்க மானியத்துடன் கடன்...

First Published Mar 7, 2018, 1:56 PM IST
Highlights
The loan with grant to set up poultry ...


கோழிப்பண்ணை அமைக்க மானியம்

 

கோழி பண்ணை வளர்ப்பில் முன்னோடியாக விளங்கும் நாமக்கல், ஈரோடு, திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்கள் போல பிற மாவட்டங்களிலும் கோழி வளர்ப்பினை ஊக்குவிக்கும் பொருட்டு தமிழக அரசால் 2013-2014ம் ஆண்டு இத்திட்டம் முதன்முறையாக செயல்படுத்தப்பட்டது.

 

திருவண்ணாமலை மாவட்டத்தில் இத்திட்டம் 240 நபர்களுக்கு ரூ.70 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டது. மேலும் இத்திட்டம் தமிழகத்தில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் நடப்பு நிதியாண்டில் அதற்கு அடுத்த ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்டது.

 

இத்திட்டத்தின் கீழ் கறிக்கோழி மற்றும் நாட்டுக்கோழி வளர்ப்பிற்கு தமிழக அரசு சார்பில் 25 சதவீத மானியமும், நபார்டு வங்கி மூலம் கோழிக்கான முதலீட்டு நிதியில் இருந்து 25 சதவீத மானியமும் ஆக மொத்தம் 50 சதவிகிதம் மானியம் வழங்கப்பட உள்ளது.

 

மீதமுள்ள 50 சதவீதத்தை பயனாளிகள் தங்கள் சொந்த செலவிலோ அல்லது வங்கியிலிருந்து கடனாகவோ பெற்றுக் கொள்ளலாம். நபார்டு வங்கியின் 25 சதவீத மானியத்தை பெறுவதற்கு பயனாளிகள் வங்கியில் இருந்து கடன் பெற்றிருக்க வேண்டும்.

 

மேலும், நாட்டுக்கோழி வளர்ப்பினை ஆண்டு முழுவதும் ஊக்குவிக்கும் பொருட்டு, இரண்டாம் தொகுப்பு கோழிக் குஞ்சுகள் வாங்கும் செலவில் 50 சதவீத மானியமும், மூன்றாம் தொகுப்பு கோழிக் குஞ்சுகள் வாங்கும் செலவில் 30 சதவீத மானியமும் தமிழக அரசால் வழங்கப்பட உள்ளது.

 

போதிய நிலம்

 

மேலும் இத்திட்டத்தின் கீழ் விவசாயிகள், தனிநபர், தொழில் முனைவோர், சுய உதவிக்குழுக்கள் ஆகியோர் தேர்வு செய்யப்பட தகுதியானர்கள் இவர்களிடம் கோழிப்பண்ணை அமைக்க போதிய நிலம் தங்கள் பெயரிலோ அல்லது குடும்ப உறுப்பினர் பெயரிலோ இருத்தல் வேண்டும்.

 

கோழி வளர்ப்பில் முன் அனுபவம் உள்ளவர்களும், ஏற்கனவே கொட்டகை அமைத்த பயனாளிகள் புதிய கொட்டகை அமைத்து பண்ணையை விரிவாக்கம் செய்ய ஆர்வ முள்ளவர்களும் இத்திட்டத்தின் மூலம் பயன் பெறலாம்.

 

click me!