வெள்ளாடு குட்டி மற்றும் நோயுற்ற ஆடுகளின் கொட்டகைகள் இப்படிதான் இருக்கணும்...

 |  First Published Feb 13, 2018, 1:48 PM IST
The goat of the goat and the diseased sheep are like this ...



1.. செம்மறியாடு மற்றும் வெள்ளாடு குட்டிகளுக்கான கொட்டகை

** ஒரு கொட்டகையில் குட்டிகளை தாயிடமிருந்து பிரிக்கும் வரை 25 குட்டிகள் என்ற அளவில் வைக்கலாம்.

** ஒரு பெரிய கொட்டகையில் தடுப்புகளை ஏற்படுத்தி தாயுடன் உள்ள குட்டிகள், தாயிடமிருந்து பிரித்த முதிர்ச்சி அடையாத குட்டிகள் மற்றும் முதிர்ச்சி அடைந்த குட்டிகள் எனத் தனித் தனியே அடைத்து வளர்க்கலாம்.

** பெரிய பண்ணையாக இருத்தால் மூன்று தனிக் கொட்டகையினை அமைத்து மேற்கண்ட மூன்று விதக் குட்டிகளை தனித் தனியே பிரித்து வளர்க்கலாம்.

** ஒரு கொட்டகையினுள் அதிகபட்சமாக 75 ஆடுகளுக்கு மிகாமல் வளர்க்க 7.5மீ நீளம், 4மீ அகலம் மற்றும் 3மீ உயரம் கொண்டு கொட்டகையினை அமைக்க வேண்டும்.

** கொட்டகையினை அகலவாக்கில் இரண்டாக பிரித்துக் கொள்ளலாம். 5மீ நீளம் ஒ 4மீ அகலம் ஒ 3மீ உயரம் கொண்ட பிரிவில் தாயிடமிருந்து பிரிக்காத குட்டிகளையும் 2.5மீ நீளம் ஒ 4மீ அகலம் ஒ 3மீ உயரம் கொண்ட பிரிவில், தாயிடமிருந்து பிரித்த குட்டிகளையும் வைத்து அடைத்து வளர்க்கலாம்.

2.. நோயுற்ற ஆட்டுக் கொட்டகை

** பண்ணையில் நோயுற்ற ஆடுகளைத் தனிமைப்படுத்தி அடைக்க நோயுற்ற ஆட்டுக் கொட்டகை ஒன்று அமைத்தல் வேண்டும்.

** 3மீ நீளம் ஒ 2மீ அகலம் ஒ 3மீ உயரம் கொண்ட நோயுற்ற ஆட்டுக் கொட்டில் ஒன்றினை மற்ற கொட்டகையில் இருந்து தள்ளிக் கட்ட வேண்டும்.

** கொட்டகையின் கதவு கீழ்புறம் பலகையினாலும் மேல்புறம் கம்பி வலையினாலும் ஆனதாகவும் இருத்தல் வேண்டும்.

** கொட்டகையின் ஜன்னல் 0.7மீ அகலமும் 2மீ உயரமும் கொண்டு, கம்பி வலையினால் மூடப்பட்டிருக்க வேண்டும்.

3.. செம்மறியாட்டுக் கம்பளி வெட்டும் அறை மற்றும் சேமிப்புக் கிடங்கு

** கம்பளி வெட்டும் அறை மற்றும் சேமிப்புக் கிடங்கினை இரண்டு பாகங்களாக தடுப்புச் சுவர் எழுப்பி பிரித்துவிட வேண்டும்.

** ஒரு பாகத்தில் கம்பளி மற்றும் கம்பளி வெட்டும் கருவிகளும் மற்றொன்றில் தீவனம் மற்றும் மருந்துகளை வைப்பதற்கும் பயன்படுத்தலாம்.

** கம்பளி வெட்டும் அறை 6மீ நீளம் ஒ 2.5மீ அகலம் ஒ 3மீ உயரம் கொண்டதாக இருத்தல் வேண்டும்.

** ஒரு மீட்டர் அகலம் மற்றும் 2மீ உயரம் கொண்ட கதவு முன்புறமாக இருத்தல் வேண்டும்.

** கதவு மரச் சட்டங்களால் ஆனதாக இருக்கலாம். அறையின் நீள வாக்கில் இருபுறமும் ஒரு ஜன்னல் இருக்குமாறு அமைத்தல் வேண்டும்.

** இந்த அறையின் தரை சுத்தமாகவும், சமதளத்துடனும் அமைத்து அறையின் சுவரில் 1ஙூமீ உயரத்திற்கு டைல்ஸ் ஒட்டுதல் வேண்டும்.

** இந்த அறை நீர்க்கசிவு மற்றும் தூசி அற்றதாக இருத்தல் வேண்டும்.

** அறையின் மூன்று பக்கங்களிலும் மூன்று ஜன்னல்கள் அமைத்தல் வேண்டும்.

click me!