வீட்டில் அன்னாசிப் பழம் வளர்த்து உங்கள் உறவினர்களையும் நண்பர்களையும் ஆச்சர்யப்படுத்துங்கள். அது எப்படி முடியும் என்கிறீர்களா?
முடியும். இதோ ஒரு சுலபமான வழி
முழு அன்னாசி பழத்தின் மேல் பாகத்தை கட் செய்து தண்ணீர் உள்ள கண்ணாடி பவுல் / பாத்திரத்தில் வையுங்கள்.
மூன்று நாட்களுக்கு பிறகு அதில் சிறு சிறு வேர்கள் இருப்பதை காணலாம். பின் அப்படியே எடுத்து மண் தொட்டியில் நட்டு விடுங்கள்.
வாரத்திற்கு இரண்டு முறை நீர் ஊற்றினால் போதும்.
ஒரு வருடம் கழித்து தான் பழம் வரும் என்றாலும் செடி ஒரு அழகிய குரோட்டன்ஸ் மாதிரி இருப்பதால் வீட்டிற்கு மிகுந்த அழகைக் கொடுக்கும்.