1.. வரையறுக்கப்பட்ட அல்லது குறிப்பிட்ட அளவு மட்டுமே தீவனம் அளித்தல்
இனப்பெருக்கத்திற்காக வளர்க்கப்படும் கோழிகள் மற்றும் வளரும் பருவத்திலிருக்கும் முட்டைக் கோழிகளுக்கு இந்தத் தீவன மேலாண்மை முறை பின்பற்றப்படுகிறது. இதில் இரண்டு முறைகள் உள்ளன.
2.. தீவனத்தின் அளவினைக் குறைத்தல்
இந்த முறையில் கோழிகளுக்குத் தேவைப்படும் தீவனத்தில் குறைந்த அளவையே அவைகளுக்குக் கொடுக்கப்படும். தினந்தோறும் தீவனத்தின் அளவினைக் குறைக்கலாம் அல்லது ஒரு நாள் விட்டு ஒரு நாளோ அல்லது இரண்டு நாட்களுக்கு ஒரு முறையோ தீவனம் அளிக்கலாம்.
ஆனால், இவ்வாறு தீவனமளிப்பதைக் குறைப்பது பண்ணையிலுள்ள மொத்தக் கோழிகளின் உடல் எடை மற்றும் உற்பத்தியாளர் பரிந்துரைக்கப்பட்ட உடல் எடை போன்றவற்றைப் பொறுத்து கணக்கிடப்பட வேண்டும்.
3.. கோழிகளுக்கு அளிக்கப்படும் தீவனத்தின் தரத்தைக் குறைத்தல்
இம்முறையில் கோழிகளுக்கு அளிக்கப்படும் தீவனத்தின் தரம் குறைக்கப்படுகிறது. மரபு சாராத தீவனங்களையோ அல்லது சத்து குறைவாகவுள்ள தீவன மூலப்பொருட்களையோ, புரதச்சத்து மற்றும் எரிசக்தி அதிகமுள்ள தீவன மூலப்பொருட்களுக்குப் பதிலாக உபயோகப்படுத்த வேண்டும். ஆனால் கோழிகளுக்கு அளிக்கப்படும் தீவனத்தின் அளவு குறைக்கப்படுவதில்லை.
வரையறுக்கப்பட்ட தீவனமளிக்கும் அதிக எண்ணிக்கையிலான தீவனத் தட்டுகளை கோழிக் கொட்டகையில் வைத்து அனைத்து கோழிகளும் தீவனத்தை ஒரே சமயத்தில் எடுக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும், இல்லையெனில் அதிகாரமுடைய கோழிகள் தீவனத்தை அதிகம் எடுத்துக் கொள்ளும்.
ஆனால், பலம் குறைந்த கோழிகள் குறைவான தீவனத்தை எடுத்துக் கொள்வதால், கோழிக்கொட்டகையில் உள்ள அனைத்து கோழிகளும் ஒரே மாதிரி இருப்பது தடுக்கப்படுகிறது.